Breaking News

ஐக்கிய அமீரகத்தில் புதிய விசா விதிகள்..

அட்மின் மீடியா
0

ஐக்கிய அமீரகத்தில் அக்டோபர் 21 முதல் புதிய விசா விதிகள்..

புதிய விதி 1

கணவனை இழந்து அல்லது விவாகரத்துப் பெற்ற தேதியில் இருந்து ஒரு வருடத்திற்குக் கூடுதலாகத் தங்கிக்கொள்ள விசா விதிமுறையில் வர இருக்கும் அக்டோபர் 21 முதல் அனுமதி அளிக்க உள்ளனர்.

கணவனை இழந்த மற்றும் விவாகரத்தான பெண்கள் பழைய விசா அனுமதியை ரத்துச் செய்ய 100 திராஹமும், புதிய விசா முறைக்கு மாற 100 திராஹமும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

புதிய விதி 2

மாணவர்களாக இருந்தால் 18 வயது ஆகும் போது கூடுதலாக ஒரு வருடம் வரை ஐக்கிய அமீரகத்தில் நேரத்தினைச் செலவிட விசா அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களும் விசா மாற்றம் செய்ய 200 திராஹம் வரை கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

புதிய விதி 3

துபாய்க்கு அடிக்கடி சென்று வருபவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பழைய விசா காலம் முடிவடைந்தால் புதிய விசா விதிமுறைக்கு மாறிட முடியும். விசிட்டர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதற்கு 600 திராஹம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தி 30 நாட்கள் நீட்டிப்பு என இரண்டு முறை செய்யலாம்.

சிறப்பு மனிதாபிமான புதிய விதி 4

ஐக்கிய அமீரகத்தில் கூடுதல் நாட்கள் தங்க வெண்டும் என்றால் 5,000 திரிஹாமை விசா டெபாசிட் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை திருப்பி அளிக்கப்படும்.

Give Us Your Feedback