டாக்டர்கள் அரசு டாக்டர்களாக வாய்ப்பு
தமிழக அரசில் 1884 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
பதவி: Assistant Surgeon (General)
காலியிடங்கள்: 1884.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.7.2018 -ஆம் தேதியின்படி பொது பிரிவினர் 35 வயதிற்குள்ளும், முன்னாள் படைவீரரான பொதுப்பிரிவினர் 48 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: UGC அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து மெட்ராஸ் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
ஒரு ஆண்டு House Surgeon- ஆக பணிபுரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56100 - 177500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினரு ரூ.750, எஸ்.சி., எஸ்.சி.ஏ. எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.375 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 17.10.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 9.12.2018
மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2018/07_MRB_Assistant_Surgeon_2018_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2018