Breaking News

தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

அட்மின் மீடியா
0

சட்டவிரோதமான முறையில் நிலத்தடிநீரை உறிஞ்சுவதை ஐகோர்ட்டு தடை செய்ததை கண்டித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் பங்கேற்றனர்.

இதில் சுமுக முடிவு ஏற்பட்டதால் தண்னீர் கேன் உற்பத்தியாளர்கள்  போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதனையடுத்து  பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து அமைச்சர் வேலுமணியை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சந்தித்து பேசினார்கள்.

அதில் சுமூக முடிவு ஏற்பட்டதை அடுத்து தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

அதே போல் ரேசன் கடை ஊழியர்கள்
போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15-ம் தேதிமுதல் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தங்களது போராட்டம் குறித்து பரிசீலிப்பதாக கூட்டுறவு துறை கூடுதல் பதிவாளர் கூறியதை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்

Give Us Your Feedback