Breaking News

'ரெட் அலர்ட் என்றால் என்ன

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி  கனமழை எச்சரிக்கைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 




ரெட் அலர்ட் என்பது மக்கள் அச்சப்படுவதற்கு அல்ல..
முன்னெச்சரிக்கையாக இருக்கத்தான்


முதலில்  ரெட் அலர்ட் என்றால் என்ன? என்று பார்ப்போம்


வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது. இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும்.


ரெட் அலர்ட் என்ற பயத்தோடு தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்க வேண்டாம். 

அவர்கள்  செய்திகளை பரபரப்பாக்க TRPக்காக தொடர்ந்து வெள்ளம் தொடர்பான செய்திகளைக் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். 


அதுமட்டுமல்ல புயல் மற்றும் வெள்ளம் தொடர்பான புரளிகள் உங்கள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரக் கூடும். 


உண்மை என்று உறுதி செய்து கொள்ளாமல்,  அதனை நம்பவும்வேண்டாம் அவற்றை ஃபார்வர்டு செய்ய வேண்டாம். 


மழை எங்கு பெய்யும் என்று சாட்டிலைட் காட்சிகளை நீங்களே பாருங்கள்



புயல், மழை என வானிலை தொடர்பான உண்மை நிலையை அறிந்து கொள்ளுங்கள் வதந்தி பரவ நீங்களே காரணமாகிவிடாதீர்கள் 

 
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய வேண்டுமா கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_10.html 



அட்மின் மீடியா

Give Us Your Feedback