கிண்டியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, வேலைவாய்ப்பு வெள்ளியாக கடைப்பிடிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று தரப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறைகளில் பணிநியமனம் பெற்று வருகின்றனர்.
அதன்படி வெள்ளிக்கிழமை அக்.12 சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
முகாம் நடைபெறும் இடம்
கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
நேரம்: காலை 10 முதல் 2 மணி வரை
தகுதி:
10 ம் வகுப்பு,
பிளஸ் 2,
ஐ.டி.ஐ.,
டிப்ளமோ,
கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
வயது: 18 முதல் 35 வரை