Breaking News

B.E., B.Tech., படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி

அட்மின் மீடியா
0
B.E., B.Tech., படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 581 பொறியாளர் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான என்ஜினீயர் தேர்வு - 2019 முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1.1.2019-ஆம் தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: 

பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், Radio Physics, Radio Engineering, Electronics & Telecommunication, Wireless Communication Electronics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: 

யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு நடைபெறும் இடம்: 

தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும். 


விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

www.upsconline.nic.in என்ற வலைத்தளத்த்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2018

மேலும் விவரங்கள் அறிய

http://www.upsc.gov.in/sites/default/files/Notification-ESE-2019-Engl_correctlinks.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.


➕➕➕➕➕➕➕➕➕
✍ *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
✍ *ADMIN MEDIA* வாட்ஸப் குருப்பில் இணைய
*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*
*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback