தமிழகத்திற்கு 7 ஆம் தேதி ரெட் அலர்ட்
அட்மின் மீடியா
0
தமிழகத்திற்கு 7 ஆம் தேதி ரெட் அலர்ட்.
மிக கனமழைக்கு வாய்ப்பு.
மாவட்ட நிர்வாகங்கள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை- இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்.
தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இலங்கை வரை வளிமண்டலத்தில் நீடிக்கும் சுழற்சி காரணமாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
இந்த தகவலை பேரிடர் மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால் தெரிவித்துள்ளளார். ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 7 ஆம் தேதி 25 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அங்கு வரலாறு காணாத மழை பெய்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.