Breaking News

வைகை 5 மாவட்ட மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், வைகையை சுற்றிய 5 மாவட்டத்திற்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் தண்ணீர்  தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆறாக இருக்கிறது வைகை.

மழை காரணமாக கடந்த சில நாட்களாக வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

Give Us Your Feedback