Breaking News

4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு

அட்மின் மீடியா
0
தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 5 குழுவினர் 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.




தமிழகத்தில் நாளை மறுநாள் அக்.,7 ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது


ஞாயிற்றுகிழமை அன்று 20.5 செ.மீ., மழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு இதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினரின் 5 குழுக்கள் 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக,

கன்னியாகுமரிக்கு 2 குழுக்களும்,

மதுரை,

கோவை,

நீலகிரி

மாவட்டங்களுக்கு தலா 1 குழுவினரும் விரைந்துள்ளார்கள்.

கன மழையினால் வெள்ள பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால்  உடனடியாக அந்த இடங்களுக்கு விரைந்து சென்று மக்களை மீட்க  இப்போதே பேரிடர் மீட்புப் படையினர் முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாகவே இந்த பேரிடர் மீட்புப் படையினர் மேற்கண்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

Give Us Your Feedback