அடுத்த 48 மணிநேரம் உலகம் முழுவதும் இனைய சேவை பாதிக்கும்
இன்னும் 2 நாள் உலகம் முழுக்க இணையதளம் பாதிக்கும்
அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணைய இணைப்புகளில்பிரச்சனை ஏற்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது
நாம் பயன்படுத்தும் இணைய பக்கங்கள், பல சர்வரில் இருந்து தனி தனியாக இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த சர்வரில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக அவ்வப்போது இனைய இணைப்பில் ஏதாவது தடங்கல்கள் உருவாகும்.
இந்த தடங்கல் பிரச்சனைகள் எதிர்காலத்தில் வராமல் தடுக்கும் வகையில் உலகம் முழுக்க இந்த சர்வர்களிலும், டொமைன் நேம் சிஸ்டம்களிலும் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
நாம் கிரிப்டோகிராபிக் கீ cryptographic key வழியாகத்கான் இணையத்தில் பாதுகாப்பாக உலவவும், இணைய பக்கங்களையும், அதன் பெயர்களையும் பாதுகாக்க உதவுகிறது.
இந்த கிரிப்டோகிராபிக் கீயில்தான் தற்போது அப்டேட் செய்ய இருக்கிறார்கள்
மேலும் இணையத்தில் உள்ள Domain Name System எனப்படும் டிஎன்எஸ் பக்கங்களை அப்டேட் செய்ய உள்ளது.
அதாவது இதுதான் இணையத்தின் முகவரி இதனை அப்டேட் செய்கிறார்கள்.
''தி இண்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் அசைன்ட் நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ் The Internet Corporation of Assigned Names and Numbers இணையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.