Breaking News

இன்னும் 3 நாட்களுக்கு மழை விடாதாம்

அட்மின் மீடியா
0

புதிய புயல் சின்னம்

*ADMIN ⓂEDIA*

தென் கிழக்கு அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

இந்நிலையில் இந்த மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும்.

ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.

இந்த மேலடுக்கு சுழற்சி அக்டோபர் 5ஆம் தேதியை ஒட்டி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.

பின்னர் 6 மற்றும் 7 தேதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
  

இதனால் 6 முதல் 8 ஆம் தேதி வலை மீனவர்கள் லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்கள் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதியில்  மழை பெய்தது.

Give Us Your Feedback