ஜனவரிக்குள் 20தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல்
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், 30 நாட்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் வருகிற ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் அறிவிப்பு
18 பேர் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் மேல்முறையீடு செய்யாவிட்டால் 6 மாதங்களுக்குள் அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. அதுவரை நாங்கள் காத்து இருப்போம். 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கப்படும் என்றார்
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும் வருகிற ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படாவிட்டால், இந்த 2 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று ஓ.பி.ராவத் கூறினார்.