இந்தோனேஷிய விமானம் கடலில் விழுந்து 189 பேர் பலி
அட்மின் மீடியா
0
இந்தோனேஷிய விமானம் கடலில் விழுந்து 189 பேர் பலி
இந்தோனேஷியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ‘லயன் ஏர்’ நிறுவனம், உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங்-737 மேக்ஸ் 8’ ரக விமானம் ஒன்று நேற்று காலை 6.20 மணிக்கு தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, பங்கல் பினாங் நகருக்கு புறப்பட்டது.
இந்த விமானத்தை இந்திய விமானி பாவ்யே சுனேஜா இயக்கினார்
விமானத்தில் குழந்தைகள் உள்பட 181 பயணிகளும், 8 ஊழியர்களுமாக 189 பேர் இருந்தனர். விமானம் பங்கல் பினாங்கு நகருக்கு சென்றடைய வேண்டும்.
ஆனால் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13-வது நிமிடத்திலேயே விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
பின்னர் சில நிமிடங்களில் அந்த விமானம் ஜாவா தீவுக்கு அருகே கடலில் விழுந்து மூழ்கியது.
விமானம் கடலில் விழுந்து மூழ்கியதை இந்தோனேஷிய அரசு உறுதி செய்துள்ளது
189 பயணிகளுடன் விமானம் கடலில் விழுந்து மூழ்கிய சம்பவம் விமான நிறுவன அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் இந்தோனேஷிய அரசு உடனடியாக மீட்புக்குழுவினரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தது.
அதன்படி மீட்புக்கப்பல்கள், ஆழ்கடலில் மூழ்கி தேடும் வீரர்கள் மற்றும் நீச்சல் குழுவினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் விமானப்படையினரின் உதவியையும் இந்தோனேஷிய பேரிடர் மீட்புக்குழுவினர் நாடினார்கள்.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் உள்பட 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் விழுந்த பகுதியில் பயணிகளின் புத்தகங்கள், செல்போன், பைகள் மற்றும் விமானத்தின் உடைந்த பாகங்கள், இருக்கைகள் சிதறிக் கிடந்தன
விபத்தில் சிக்கியதை அறிந்த பயணிகளின் உறவினர்கள் பங்கல் பினாங் விமான நிலையத்தில் சோகமாக காத்துக் கிடக்கின்றனர்.
விபத்துக்குள்ளான விமானம் புத்தம்புதிய விமானம் ஆகும் கடந்த ஆகஸ்டு மாதம்தான் லயன் ஏர் நிறுவனம் வாங்கியிருந்தது.
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து தெரியவில்லை.
மேலும் சமூக வலைதளங்களில் விமானம் கீழே விழுவதற்க்கு முன் எடுக்கபட்ட வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது
பார்பவர்களை கண்கலங்க வைக்கும் வீடியோ உங்களுக்காக