Breaking News

18 எம் எல் ஏக்கள் இதுவரை நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் என்று எண்ணி, ஆகஸ்ட் 22 ம் தேதியன்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் புதுச்சேரி, கூர்க் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்

ஆனால் என்ன கண்டத்து
செப்டம்பர் 18ம் அன்று தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைவோம் என்று கருதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அப்போதைய எடப்பாடி ஆட்சி தப்பித்தது. இந்த ஆட்சி ஒரு வருடத்தை நிறைவு செய்துவிட்டது.
  

வழக்கு நடந்தது
இதற்கு எதிராக எம்எல்ஏக்கள் எல்லோரும் சென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்கு இடையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது. சட்டப்பேரவை இணையதளத்தில் 18 எம்எல்ஏக்களின் பெயர், விவரம் நீக்கப்பட்டது. 2017 செப்டம்பர் 20 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மறுஉத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும், அந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த கூடாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  

நீண்ட வழக்கு
அதன்பின் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டது. சென்ற வருடம் தொடங்கிய வழக்கில் விசாரணை 2018 ஜனவரி 23ம் தேதி வரை நடந்தது. அதன்பின் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. பல மாதங்களாக இதில் தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்தது.
  

இரண்டு தீர்ப்பு
சரியாக ஐந்து மாதங்களுக்கு பின் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வெளியானது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு தீர்ப்பை வழங்கியது. ஆனால் இருவரும் வேறு வேறு தீர்ப்பு வழங்கினார்கள்.
சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று, 18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தலாம் என்றும் இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.
18 எம்எல்ஏக்களையும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கினார். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி சாத்தியநாராயணனுக்கு மாற்றப்பட்டது.
  

இன்று தீர்ப்பு
இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி முடிவடைந்தது. அதன்பின் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்து தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் தங்கி இருக்கிறார்கள்.

முதல்வரை மாற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் என்று இருந்த நிலையில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

சபாநாயகர் உத்தரவை எதிர்த்து எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

18 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது.

சட்டப்பேரவை இணையதளத்தில் 18 எம்எல்ஏக்களின் பெயர், விவரம் நீக்கப்பட்டது.

2017 செப்டம்பர் 20 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில்,

மறுஉத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும்,

அந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த கூடாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டது.

வழக்கு நடந்து முடிந்து  தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு தீர்ப்பை வழங்கியது. ஆனால் இருவரும் வேறு வேறு தீர்ப்பு வழங்கினார்கள்.

சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும்  18 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தலாம் என்றும் இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.

18 எம்எல்ஏக்களையும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கினார்.

இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி சாத்தியநாராயணனுக்கு மாற்றப்பட்டது.
  
இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் முடிந்து  இன்று  இந்த வழக்கில் அளிக்கபட்ட தீர்ப்பு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்lலும் என உயர்நீதிமன்றம்  தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் நீக்கம் சட்டவிரோதமானது இல்லை

சபாநாயகர் முடிவில் தவறு இல்லை

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது

தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜியின் தீர்ப்பை உறுதி செய்தார் 3வது நீதிபதி சத்தியநாராயணா

18 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த இருந்த தடையும் நீக்கம்

தகுதி நீக்க எம்எல்ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் உத்தரவு

Give Us Your Feedback