Breaking News

ஆதார் சட்டவிரோதமானது என்று தீர்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி

அட்மின் மீடியா
0
 ஆதார் சட்டவிரோதமானது என்று தீர்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி




 ADMIN MEDIA


ஆதார் எண் கட்டாயமா என்ற வழக்கில் இன்று 26.009.2018 உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளித்து உள்ளனர்.

5 பேரில் 3 நீதிபதிகள் தீர்ப்பை சிக்ரி வாசித்தார்.

மற்ற 2 நீதிபதிகள் வேறு தீர்ப்பு தனியாக வழங்கினார்கள்.

இதில் ஆதார் தீர்ப்பில் நான்கு நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

இதில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் ஆதாருக்கு எதிராக தீர்ப்பளித்தார்.

அவர் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

ஆதார் பாதுகாப்பானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆதார் தனி மனித உரிமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

ஆதார் மூலம் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது.

இது வாக்கு வங்கி அரசியலை நோக்கியும், மக்களை மிரட்டுவதை நோக்கியும் அழைத்து செல்லும்.

ஆதாரில் நிறைய குழப்பங்கள் உள்ளது.

மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற போதுமான பலன்கள் ஆதார் மூலம் நிறைவேற்றமுடியாது.

மக்கள் நலத்திட்டங்களை இது தடுக்கிறது.

எல்லா வசதியும் இதன் காரணமாக எல்லோருக்கு சென்று சேர்வதில்லை.

ஆதாரில் தகவல் திருட்டு நடக்கிறது.

 இதை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆதார் அமைப்பு இந்த தகவல் திருட்டை பெரிய விஷயமாக கருதுவதில்லை.

இதில் உள்ள தகவல் குளறுபடியால் மக்கள் அலையவேண்டி உள்ளது.

குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆதார் வழங்கும் UDAI  நிறுவத்துக்கு இருக்கிறது. ஆனால், முறையான பாதுகாப்பு அம்சம் இல்லாமல் இருக்கிறது.
 
இன்று இந்தியாவில் ஆதார் இல்லாமல் வாழமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது, இதுவே அரசியலமைப்புச்சட்டம் 14-வது பிரிவை மீறியது போன்றது.

நாடாளுமன்றம் ஆதார் குறித்து சட்டம் இயற்ற உரிமை இருக்கும்போது, மக்களின் விவரங்களைப் பாதுகாக்காமல் இருந்தால், அது பல்வேறு உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும்


செல்போன் என்பது இன்றைய வாழ்க்கையில் மிக மிக அத்தியாவசியமான ஒன்று. அதை ஆதாருடன் இணைக்க கூறியது மிகப் பெரிய தனி மனித உரி்மை மீறலாகும். ஒருவரது சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும்.
அதேபோலத்தான் வங்கிக் கணக்கு தொடங்கவும் ஆதார் எண் கட்டாயம் என்பது. வங்கிக் கணக்கு தொடங்க விரும்பும் ஒவ்வொருவரும் தீவிரவாதியா என்ன? பண மோசடி செய்வதற்காகவா ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு தொடங்குகின்றனர்? இது முற்றிலும் சர்வாதிகாரமான நோக்கமாகும். தகவல் சுதந்திரம், தனி மனித சுதந்திரம், புள்ளிவிவர சுதந்திரம், சுய மரியாதை என எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கியுள்ளது ஆதார் திட்டம். 
இங்கு சேகரிக்கப்படும் தகவல்களை தனியார் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்று கூறிய நீதிபதி சந்திரசூட் அவர்கள் மேலும்

ஆதாரை நிதிமசோதாவாக ஏற்க முடியாது. நிதி மசோதாவாக இல்லாத ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நிதி மசோதா என்று கூறி தாக்கல் செய்வது ஏமாற்றுவேலை.

ஆதாரை நிதி மசோதாவாக தாக்கல் செய்தது அரசியலமைப்பிற்கு எதிரானது.

இறுதியாக நீதிபதி டி.ஒய் சந்திரசூட் ஆதாரை கட்டாயமாக ஏற்க முடியாது என்றார்.

ஆனால் அதே சமயம் ஆதார் தீர்ப்பில் நான்கு நீதிபதிகள் ஆதாருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். அதேபோல் நான்கு நீதிபதிகளும் ஆதாரை நிதி மசோதாவாக கருத முடியும் என்றும் கூறியுள்ளனர்.

 இதனால் ஆதார் நான்கு நீதிபதிகளின் உத்தரவின் படி அரசு சேவைகளுக்கு கட்டாயமாகிறது.

*•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*


*# என்றும் சமூக பணியில்..*


*# ADMIN ⓂEDIA வில் இணைய...*




*பதிவுநாள்: 26.09.2018*


*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*




*ADMIN ⓂEDIA*

Give Us Your Feedback