Breaking News

இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய மசூதி அவசியமா

அட்மின் மீடியா
1
முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு அளிக்கஉள்ளது உச்சநீதிமன்றம்



உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் பாபர் மசூதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.


கடந்த 1950-ஆம் ஆண்டில் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார்.


அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார்.


மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும், அதுதொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது.


பாபர் மசூதி தொடர்பாக எம்.இஸ்மாயில் ஃபரூக் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1994-இல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது.


அதில், இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய மசூதி அவசியமா என்று
கேள்வி எழுப்பிய நீதிமன்றம் பள்ளிவாசல்கள்  முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தீர்ப்பளித்தது


இந்தத் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் மூலம் மறுஆய்வு செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

Give Us Your Feedback

1 Comments