Breaking News

ஏடிஎம் நம்பரை கேட்டு போன் வந்தால் என்ன செய்யவேண்டும்

அட்மின் மீடியா
0
உங்கள் ஏ டி எம் விவரங்களை யாருக்கும் சொல்லாதீர்கள்


உங்கள் போனுக்கு ஒரு அழைப்பு வரும். எதிர்முனையில் ஒரு ஆண், அல்லது  பெண் பேசுவார்

வணக்கம் சார்... நீங்க பயன்படுத்துற ஏடிஎம் லாக் ஆயிடுச்சி லாக் எடுக்கலனா நீங்க ஏடிஎம் மூலமாக பணம் எடுக்க முடியாது.

உங்க வசதிக்காக  வங்கி ஏடிஎம் ஹெல்ப்லைன் சேவை மூலமாக இதை சரி செய்றோம்

உங்க ஏடிஎம் கார்டுல உள்ள 16 டிஜிட் நம்பர், பின் நம்பரை சொல்லுங்க... நாங்க உடனே சரி பண்ணி கொடுத்துடுறோம்

இது வாடிக்கையாளர்கள் சேவைக்காக செஞ்சுட்டு வர்றோம்... உடனே சொல்லுங்க. இல்லாட்டி ஏடிஎம் மூலமாக பணம் எடுக்க முடியாது... என்று கூறுவார்கள்

உங்கள் ஏடிஎம்16 டிஜிட் நம்பர், மற்றும் உங்கள் பின் நம்பரை சொல்லிட்டிங்கனா அவ்வளவுதான்

நீங்கள் வைத்திருக்கும் பணம் ஒரு நொடியில் காலியாகிவிடும்

இதுபோன்ற மோசடிகள் உலகம் முழுவதும் பரவலாக நடந்து வருகின்றன*

வங்கிகளில் சென்று கேட்டால்  நாங்கள் யாருக்கும் போன் செய்து பேசுவதில்லை என்று கூறுவார்கள்

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், நம்ம பணம் எங்கபோச்சி யார் எடுத்தாங்கனு கண்டுபிடுக்கவே முடியாது

மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள

வங்கியில் இருந்து யாரும் யாருக்கும் போன் செய்யமாட்டார்கள்

இதை முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் சந்தேகம் மற்றும்  விளக்கங்களுக்கு நீங்கள் வங்கிக்கு வந்துதான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்

கணக்கு மற்றும் ஏ.டி.எம்., கார்டு குறித்த ரகசிய குறியீட்டு எண்ணை, எந்த சூழலிலும் யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என்பதை அனைவரும் தெளிவுவாக புரிந்து கொள்ள வேண்டும்.

யாரோ போனில் பேசுவதை நம்பி, கணக்கு விவரங்கள், ஏ.டி.எம்., கார்டு எண், குறியீட்டு எண் விவரங்களை கூறக்கூடாது
தேவைப்படும் விவரங்களை, வங்கிக்கு நேரில் வந்து தருவதாக கூறி, அழைப்பை துண்டிக்க வேண்டும்

உங்களிடம் விபரத்தை கேட்டு வாங்கும் அவசியம் வங்கிகளுக்கு இல்லை!

உங்களுக்கு வரும் போன் அழைப்புகளை நம்பி, ஏடிஎம் நம்பரை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்

எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback