இண்டர்வியூ போகும் முன் படியுங்கள்
அட்மின் மீடியா
0
*அவர்கள் நம்மிடம் எதிர்பார்பது என்ன* ❓
*எந்தெந்த தகுதிகளை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.* ❓
*DMIN ⓂEDIA*
✅ *உங்கள் வேலையை உங்கள் மதிப்பெண்ணைத் தாண்டி பல விஷயங்கள் நிர்ணயிக்கின்றன.
✅ நம்மை வேலைக்கு எடுக்க நினைப்பவர்கள், நம் திறனைத் தவிர நிறைய விஷயங்களை அமைதியாக கவனிக்கிறார்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.
✅ காலம் தவறாமை (Punctuality):
நாம் வேலைக்கு எப்படி வருவோம் என்பதை, நாம் முதல் நாள் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் அன்றே கண்டுபிடித்து விடுவார்கள். நம்முடைய வெற்றியை காலம்தான் நிர்ணயிக்கிறது.
✅ஆம், 10 மணி நேர்முகத் தேர்வுக்கு அனைவருக்கும் முன்னால் 9:45கு சென்று பாருங்கள்.
✅உங்களை முதலில் குறித்து வைப்பார்கள். அதுமட்டுமின்றி, நாமும் பதட்டமின்றி இருக்க நேரம் கிடைக்கும்.
✅ காலையில் அவசர அவசரமாக பேருந்து கிடைக்காமல் ஓடி வந்து நேர்முகத்தேர்வில் பதட்டம் குறையாமல் சொதப்புவதற்குப் பதில், நிதானமாக வெற்றியைத் தட்டிச் செல்லலாம்.
✍ சரியான நேரத்திற்கு வருவதற்கு சின்ன டிப்ஸ்:
✅இரவே உடை, கொண்டு செல்ல வேண்டிய ஆவணம், பேனா, பேப்பர் என அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
✅கடிகாரத்தில் 15 நிமிடம் முன்னதாக வைத்துக் கொள்ளுங்கள்.
✅நாம் செல்ல இவ்வளவு நேரம்தான் ஆகும் எனக் கணிக்காதீர்கள்.
✅ மரியாதை (courtesy):
✅ மரியாதை என்றதும், முதலாளி வருகையில் எழுந்திருப்பது, 'சார்' போட்டுப் பேசுவது தவிர்த்து நிறைய விஷயங்கள் உள்ளன.
✅ நமக்கு தேநீர் தரும் பையனுக்கும், ரிசெப்ஷனில் அமர்ந்திருப்பவருக்கும், மற்ற சக நண்பர்களிடமும் ஒரே மாதிரி பழகுவதுதான் இந்த மரியாதைக்கான அர்த்தம்.
✅முதல் நாள் சென்றதும் குடிக்க தண்ணீர் தரும் அண்ணாச்சியைப் பார்த்து "தேங்க்ஸ் அண்ணே!" என்று கூறுவதில் இருந்து உங்கள் ஆளுமை தொடங்குகிறது! இப்படி உங்கள் பண்புகளை கிடைக்கும் ஒவ்வொரு சிறு சிறு வாய்ப்புகளிலும் வெளிப்படுத்துங்கள்.
✅ அது அனைத்தும் குறிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறது.
3⃣உற்சாகம் மட்டும் போதுமே:
✅ ஆம், நமக்கு இந்த வேலை மிகவும் அத்தியாவசியம்தான். ஆனால், அது எந்நிலையிலும் அவர்களுக்குத் தெரியக் கூடாது. நாம் உற்சாகமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த வேலையை விட்டால் வேறு வேலை இல்லை என்பது போல எந்நிலையிலும் பேசிவிடக் கூடாது.
✅ அதேபோல, ஏற்கெனவே வேலை செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்றால், உங்கள் முந்தைய முதலாளியை குறைகூறுவது போல பேசி விடாதீர்கள். அது உங்களைப் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
✅ பேசும் முறை (way of talking):
✅ நம்முடைய எதிராளியை நம் கட்டுக்குள் வைக்க ஒரு எளிமையான வழி, அவர்களின் கண்ணை நேருக்கு நேராகப் பார்த்து பேசுதல். ஆம், நம்முடைய தைரியத்தை வெளிப்படுத்த இதுதான் சிறந்த வழி. என்ன பேசினாலும் கண்ணைப் பார்த்து பேச வேண்டும்.
✅மேலும், நாம் ஒரு நிறுவனத்திற்குச் செல்வதற்கு முன்னால், அந்நிறுவனத்தைப் பற்றிய பழைய விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அவர்கள் கேட்கும் கேள்விக்கு, அந்நிறுவனம் சந்தித்த முந்தைய பிரச்சனையை எடுத்துக்காட்டாக கூறி தீர்வு சொல்லலாம்.
✅ இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது எவ்விதத்திலும் இது அவர்களைக் குற்றம் கூறுவது போல மாறி விடக் கூடாது. நம்முடைய தெளிவான சிந்தனையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.
✅ Stay in touch:
✅ சரி நேர்முகத் தேர்வு முடிந்து விட்டது. வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியவில்லை. நீங்கள் அனைத்தையும் சரியாக செய்திருந்தாலும், சொதப்பி இருந்தாலும் பரவாயில்லை.
✅ஒரு வேலை நாள் முடிவதற்குள், உங்களிடம் பேசிய அலுவலர்களுக்கு ஒரு தேங்க் யூ நோட் அனுப்பி விடுங்கள். அது ஈ-மெயில் அல்லது கிரீட்டிங் மூலமாக இருக்கலாம்.
✅அவர்களின் பேச்சும் கேள்விகளும் உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம், அவர்கள் நிறுவனத்தில் உங்களைக் கவர்ந்த விஷயம் என சில முக்கிய விஷயங்களை சுருக்கமாக தெளிவாக எழுதி அனுப்பி விடுங்கள்.
✅ஒரே மெசேஜை அனைவருக்கும் அனுப்பாமல், தனித்தனியாக அனுப்புவது நல்லது. இது உங்கள் மீது ஒரு புதிய அபிப்ராயத்தை ஏற்படுத்தும். இந்த வேலை கிடைப்பது இப்போது 95% உறுதி. சரி, அப்படியே கிடைக்காமல் போனாலும், ஏதாவது பண்டிகை தினத்திலோ முக்கியமானோ தினத்திலோ ஒரு வாழ்த்து தெரிவியுங்கள்.
✅ அடுத்து ஏதேனும் வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக நீங்கள்தான் முதலிடத்தில் இருப்பீர்கள்!
✅இல்லையெனில் அவர்களின் நட்பின் மூலமாக ஒரு புதிய வாய்ப்பு உங்கள் கதவை தட்டும்.
❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 12.09.2018*
*# , அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*ADMIN ⓂEDIA*
