Breaking News

உச்சநீதிமன்றம் மீண்டும் பரபரப்பான தீர்ப்பு

அட்மின் மீடியா
1
 கள்ளகாதல்  தப்பில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு ------  

நாடு எங்கே செல்கின்றது?


திருமணம் ஆண பெண் வெளியே வேறு ஒரு ஆணுடன் காதல் புரிவது கிரிமினல் குற்றச் செயல் இல்லை. என்றும் தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை அது குற்றச் செயல் இல்லை. அதேபோல ஒரு பெண்ணின் கணவர் அவருக்கு உரிமையாளர் அல்ல என்றும் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 


கணவர் என்பவர் பெண்ணின் உரிமையாளர் அல்ல. இருவரும் சமமானவர்கள்.

திருமண பந்தத்திற்கு வெளியே உறவில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் இல்லை.

தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை என்பது சட்டவிரோதமாகும்.

தகாத உறவால் யாரும் தற்கொலை செய்து கொள்ளாதவரை இதை குற்றச் செயலாக கருத முடியாது.

அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு சட்டவிரோதமானது  என்று தீர்பளித்துள்ளார்கள்.


இந்தியத் தண்டனைச் சட்டம் 497 என்பது திருமண உறவுக்கு வெளியே பாலியல் உறவு கொள்வோருக்கு தண்டனை வழங்கும் சட்டமாகும். இதில் ஆண்களுக்குத்தான் தண்டனை உண்டு. பெண்களுக்குக் கிடையாது.


ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று 497-ம் பிரிவு கூறுகிறது. 


ஆனால் இதில் அந்த பெண் தண்டிக்கப்பட மாட்டார். ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார். 1860ல் இந்த சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கைது செய்யப்படும் ஆண்கள், பாலியல் வன்புணர்வு என்ற குற்றத்தின் கீழ் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதற்கு 5 வருடம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.


இந்த சட்டப்பிரிவிற்கு எதிராக மூன்று காரணங்களுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. 

1. இந்த சட்டப்பிரிவின் கீழ் எப்படி ஒரு ஆண் மட்டுமே தண்டிக்கப்படலாம். 

2. இது பாலியல் சமத்துவத்திற்கு எதிரானது. 

3 இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்பது முக்கிய குற்றச்சாட்டாகும்.


மேலும் பெண்கள் ஆண்களின் சொத்துக்கள் போல பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்று அவர்களே தீர்மானிக்க வேண்டும். அதனால் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.


பாலியல் உறவு என்பது இருவரின் உரிமை. 

இருவரும் முழு விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்ளும் போது, அதில் பாலியல் உறவு கொண்ட ஆணை மட்டும் எப்படி கைது செய்ய முடியும். அதுவும் விருப்பத்துடன் நடந்த விஷயத்தை எப்படி வன்புணர்வு குற்றமாக பார்க்க முடியும் என்று இந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று அது போல் ஒரு சட்டம் இருப்பதே அரசியல் அமைக்கு எதிரானது என்று கூறி
கடந்த 158 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்திய த்ண்டனை சட்டத்தின் 497வது  அடல்டரி சட்டப் பிரிவு செல்லாது என்று கூறி பரபரப்பான தீர்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்,
  *•┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈•*


*# என்றும் சமூக பணியில்..*
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 26.09.2018*
*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
*ADMIN ⓂEDIA*



Give Us Your Feedback

1 Comments

  1. நாடு எதை நோக்கி போய் கொன்டிருப்பது?
    ஒருவனுக்கு ஒருத்தி எல்லாம் பழைய
    கதையாகிப்போனதா?

    பதிலளிநீக்கு