இனி அடிக்கடி கரண்ட் கட் ஆகும் ஒன்னும் செய்யமுடியாது
அட்மின் மீடியா
0
*இனி அடிக்கடி கரண்ட் கட் ஆகும் ஒன்னும்
செய்யமுடியாது*
*DMIN ⓂEDIA*
காற்றாலை மின் உற்பத்தி சரிவு,
நிலக்கரி தட்டுப்பாடு
மத்திய மின் நிலையங்களில் இருந்தும், குறைந்த மின்சாரம் வழங்கப்படுவதால், தமிழக மின் வாரியத்திற்கு, நெருக்கடி அதிகரித்துள்ளது.
மத்திய அரசுக்கு, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, கர்நாடகா மாநிலங்களில், அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன.
அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், தமிழகத்திற்கு, தினமும், 6,138 மெகா வாட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிலிருந்து, 4,500 மெகாவாட்டிற்கு மேல் வழங்கப்படும்.
அதிலிருந்து, 4,500 மெகாவாட்டிற்கு மேல் வழங்கப்படும்.
காற்றாலை சீசன் முடிவடைவதற்கு அவகாசம் இருந்தாலும், தற்போது, அவற்றில் இருந்து, 500 மெகா வாட்டிற்கு கீழ் தான் மின்சாரம் கிடைக்கிறது.
இதனால், தனக்கு சொந்தமான, அனல் மின் நிலையங்களில், முழு அளவிற்கு,
மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை, மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.
மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை, மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது.
*ஆனால், ஒரு வாரத்திற்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது.*
ஒடிசா, மேற்கு வங்க மாநில சுரங்கங்களில் இருந்து, நிலக்கரி வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரமும் குறைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வல்லுார்; திருநெல்வேலி, கூடங்குளம்; கடலுார், நெய்வேலியில் உள்ள, மத்திய மின் நிலையங்களில், பழுது, பராமரிப்பு பணிக்காக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தற்போது, மத்திய தொகுப்பில் இருந்து, சராசரியாக, 3,400 மெகா வாட்
மின்சாரம் தான் கிடைக்கிறது.
மின்சாரம் தான் கிடைக்கிறது.
ஏற்கனவே, காற்றாலை மின்சாரமும் சரிந்த நிலையில், மத்திய மின்சாரமும் குறைந்துள்ளதால், மின் தேவையை சமாளிக்க சிரமம் ஏற்பட்டு உள்ளது.
மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் பொறுப்பற்ற செயல்பாடுகளால் தற்போது தத்தளித்து கொண்டிருக்கின்றது
❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈
*# ADMIN ⓂEDIA வில் இணைய...*
*பதிவுநாள்: 13.09.2018*
*# , அட்மின்மீடியா செய்திகளை பார்க்க..*
http://adminmedia1.blogspot.com
*ADMIN ⓂEDIA*
