Breaking News

ஒற்றை கண் குழந்தை தஜ்ஜாலா உண்மை என்ன one eye child fact

அட்மின் மீடியா
0

ஒற்றை கண் குழந்தை தஜ்ஜாலா 

 


*ஒற்றை கண் குழந்தை*

🗣தஜ்ஜால் பிறந்துவிட்டார்.

🗣உலகஅழிவு ஆரம்பமாகிவிட்டது. என்றும் அதனுடன் ஒரு வீடியோவும் சில மார்க்கம் தெரியாத மூடர்களால் பரப்பபடுகின்றது 


🗣 *அது உண்மையா*

🗣உண்மை என்ன என்று தெரியாமல் ஷேர் செய்பவர்களே *தெரிந்து கொள்ளுங்கள்*

🗣2006 செப்டம்பர் மாதம் சென்னையில்  பிறந்த *அந்த ஒற்றை கண் குழந்தை சைக்லோபியா (Cyclopia) என்ற நோயினால் பாதிக்கப்பட்டு பிறந்ததாகும்*
🗣குழந்தை பிறந்து 1 மாதத்திற்குள் இறந்துவிட்டது

*ஆதாரம்*


🗣இக்குழந்தைக்கு பெயர் கூட சூட்டவில்லை, மருத்துவமனையில் "கோமதியின் குழந்தை" என்று தான் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. 

🗣 சைக்லோபியா நோயினால் தீவிர சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் எந்த குழந்தை மருத்துவ உதவி எதுவும் பயன் இன்றி  இறந்து விட்டது. 

🗣 Cyclopia என்பது மிகவும் அறிதான நோய், இது மில்லையனில் ஒரு குழந்தைக்கு தான் ஏற்படும் 

🗣மேலும் இது போன்று இந்தியாவில் மார்ச், 2011 இல் ஒரு குழந்தை பிறந்ததாகவும், பிறந்து 24 மணி நேரத்தில் இறந்துவிட்டதாகவும் ஆய்வு அறிக்கை கூறுகிறது. 

🗣இஸ்ரேலில் 2011ம் ஆண்டு ஒர் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் செய்தி உள்ளது.

🗣 *இந்த ஒற்றை கண் குழந்தை தஜ்ஜாலா*

🗣 *ஒற்றைகண் குழந்தை தஜ்ஜால் இல்லை  என்பதை அட்மின் மீடியா மூலமாக உங்களுக்கு தெளிவு படுத்துகின்றோம்*

✍🏻தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பி இருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதை, தமீமுத்தாரி(ரலி) அவர்களின் மூலமாக நாம் அறியலாம். இதை நபி(ஸல்) அவர்களும் உறுதிபடுத்தியுள்ளார்கள். 

✍🏻இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
(நூல்: முஸ்லிம் 5235.)

✍🏻 *ஹதீஸ் விரிவாக கீழே உள்ள லின்ங்கில் காணலாம்*

 
✍🏻 *ஆக தஜ்ஜால் இனி பிறக்கமாட்டான்*

✍🏻 *ஏற்கனவே பிறந்துவிட்டான்*

✍🏻 *அவனுக்கு இரண்டு கண்ணில் ஒன்று குருடு*

✍🏻 *உண்மை இப்படி இருக்க*

🗣 மார்க்கத்தின் பெயரால் கட்டு கதைகளை பரப்பாதீர்கள்

🗣 புனித குர் ஆனை மூட்டை கட்டி பரன் மேல் வைத்துவிட்டு 

🗣 மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாமல் 

🗣 தனிபட்ட கருத்துகளை மார்க்கமாக்காதீர்கள்

✍🏻 *உங்களுக்கு எச்சரிக்கை* 

🌹யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்!” என இது குறித்து நபி(ஸல்) அவர்கள்  கண்டித்துள்ளார்கள்.

📓 புகாரி 168,

📓முஸ்லிம் 2

✍🏻 *பொய்யான செய்தியினை  பரப்பாதீர்கள்*

🌷முஃமின்களே தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், 

🌷அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் அறியாமையினால் குற்ற மற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். 

🌷பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவீர்களாக 

📓 அல் குர் ஆன் 49:6 

🔮➖🔮➖🔮➖🔮➖🔮

*🅰DMIN ⓂEDIAவில் இனைய..*



*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*


*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback