மக்கா 120
🎙 மக்கள் மீடியா 🎙
💐 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)💐
*~மாஷா_அல்லாஹ் மாஷா_அல்லாஹ். السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ.தற்பொழுது மக்காஹ் நகரின் புனித மஸ்ஜித் விரிவாக்க, இடங்கள் தோண்டப்பட்டு வரும் நிலையில்; 120 வருடங்களுக்கு முன்பு அல்லாஹ்விடம் சேர்ந்த ஷேகுல் இஸ்லாம் இமாம் நவாவி பன்தாஹி ரஹ்மத்துல்லாஹி அவர்களின் புனிதமான மையத் வெளிக்கொணரப்பட்டது. இவர் மக்காஹ் மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றியவர். நேற்று முன்தினம் மரணித்தவர்கள் போன்று அவரின் உடல் காணப்படுகின்றது. ரஸூலுல்லாஹி صلى الله عليه وسلم கூற்றுப்படி நபிமார்கள், அவுலியாக்கள், இறைநேசர்கள், சத்தியவான்கள், ஆகியவர்களின் உடம்பை மண் தீண் டாது. இதை மறுப்பவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அவ்வப்பொழுது அல்லாஹ் காட்டும் உதாரணமாகும்.~*
👆🏻 *இதே போன்று சில மெசேஜ் பல புகைப்படங்களை மாற்றம் செய்து பரப்பப்படுகின்றன*
*அவைகளையும் ஒரு கூட்டம் ஆய்வு செய்யாமல் மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் என்று கூறுகிறது*
_~ரஸூலுல்லாஹி صلى الله عليه وسلم கூற்றுப்படி நபிமார்கள், அவுலியாக்கள், இறைநேசர்கள், சத்தியவான்கள், ஆகியவர்களின் உடம்பை மண் தீண் டாது.~_
👆🏻 *இதுபோன்ற ஹதீஸ் இல்லை*
*நபியின் பெயராலும் மார்க்கத்தின் பெயரால் ஒரு செய்தியை பரப்பும் முன் நாம் நன்கு ஆய்வு செய்து தான் பரப்ப வேண்டும்*
*இல்லையெனில் பெரும் பாவத்தை பரப்பும் நபர்களில் நாமும் ஒருவராக ஆளாக நேரிடும்*
*_இதே மாதிரி ஒரு மெசேஜ் நேற்று வேறு புகைப்படத்துடன் வந்தது ஆகையால் இது போன்ற செய்திகளை ஷேர் செய்ய வேண்டாம்_*
🌴 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
💥 *என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!'*
அறிவிப்பவர் : அலி(ரலி)
ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2)
💥 *என் மீது, எவன் வேண்டுமென்றே பொய் சொல்கின்றானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்' என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதனால்தான் உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன் என்று அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூல்கள் : புகாரீ 108, முஸ்லிம் 4
💥 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்'.*
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல்கள் : புகாரீ 110, முஸ்லிம் 4
🌴 *அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!'*
அறிவிப்பவர் : முகீரா(ரலி)
நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5
❌ சிலர் நன்மை என்றும் இதனால் நமது மார்க்கத்திற்கு பெருமை என நினைத்து ஷேர் செய்யும் விஷயம் அவர்களுக்கு சாபமாகவே முடிந்து விடுகிறது.
👍 *இனி வரும் காலங்களில் உண்மை எது பொய் எது என ஆராய்ந்து ஷேர் செய்வோம்*👍
🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
இஸ்லாமிய செய்திகள் & பொதுவான தகவல்களை அறிய எங்கள் பேஸ்புக் பேஜ்ஜை லைக் செய்து கொள்ளுங்கள்
பேஸ்புக்கில் எம்மை தொடர👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
🇮🇳 MAKKAL MEDIA🇮🇳