Breaking News

சமாதிக்குள் பாம்பு

அட்மின் மீடியா
0

*​​​​🅰 D M I N Ⓜ E D I A​*

#கண்டதை_பரப்பாதீர்கள்
#பொய்யர்களாக_ஆகாதீர்கள்

"சமாதிக்குள் புகுந்து மையத்தை உண்ணும் மலை பாம்பு"

என்ற செய்தியுடன் கல்லறையிலிருந்து மலைப்பாம்பு ஒன்றை இளைஞர் ஒருவர் தூக்குவது போன்று ஒரு வீடியோ வாட்சப், ஃபேஸ்புக்கில் பரவுகிறது.

இதன் உண்மை தண்மை என்ன.??

இணையத்தில் இதுபற்றி தேடிய போது 2016 ல் வியட்நாமில் நடந்த நிகழ்வு என்றும் இந்த கல்லறை என்பது பழைமையான கல்லறை என்றும் தகவல் கிடைத்தது.

இது இப்படியிருக்க...

சமாதிக்குள் புகுந்து மையத்தை உண்ணும் மலை பாம்பு என்று கூறுவது பொய்யான தகவல். 2016 லிலே மதநம்பிக்கையுடன் ஒப்பிட்டு இந்த பொய்யான செய்தி பல நூற்றுக்கணக்கான வலைதளங்களில் பரவிவிட்டது. இட்டுகட்டி யாரோ கூறியுள்ளதை நம்பி இப்போதும் இதை பரப்புகின்றனர்.

வியட்நாம் மொழியில் பதியப்பட்ட லிங்கில் கூறிய செய்தியில் மிக பழைமையான கல்லறை என்று கூறப்பட்டுள்ளது. மிக பழமையான கல்லறை என்றால் எப்படி மனித உடல் சேதமடையாமல் இருக்கும்?. அதிகபட்சமாக அதில் எலும்பு தான் இருக்கும் அதுவும் மண்ணோடு மண்ணாக மக்கியே போயிருக்கும்.

இதில் பழைமையானதால் கல்லறை சேதமடைந்தோ அல்லது வேறு காரணங்களாகவோ கல்லறையில் குழி விழுந்து அந்த குழியின் வழியாக மலைப்பாம்பு புகலிடம் தேடி சென்றுள்ளது.

இதை கண்ட அப்பகுதி இளைஞர் அந்த பாம்பை வெளியே எடுக்க முயற்சிக்கிறார். அதை மற்ற இளைஞர்கள் வீடியோ எடுக்கின்றனர். அது 2016 ல் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நாம் முடிவெடுக்காலம்.

https://mb.dkn.tv/trong-nuoc/diem-tin-viet-nam-12-nhung-tin-bai-noi-bat-nhat-tuan-qua.html

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம்(பிறருக்கு)அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆகவே...
கண்டதை பரப்பாதீர்கள்
பொய்யர்களாக ஆகாதீர்கள்

*​​​​🅰 D M I N Ⓜ E D I A​*

Give Us Your Feedback