Breaking News

டிசம்பர் 6 பாகம் 1

அட்மின் மீடியா
0
📡அட்மின்மீடியா 📡
💐பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்💐
மறக்கமாட்டோம்
முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகவும் இந்து க்கள் மற்றும் முஸ்லீம்களின் சகோதரத்துவத்தை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட 6-12-1992 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்க பட்டது.அதற்கு அவர்கள் கூறும் காரணமும் அதன் உண்மையும்.
பகுதி 1⃣
1⃣ராமர் பாபர் மசூதி இருந்த இடத்தில் பிறந்ததாக சொல்லுகிறார்கள்.
2⃣பாபர் மசூதி பிறந்த இடத்தில் ராமர்கோவில் இருந்ததாகவும் அதனை இடித்துவிட்டு அங்கு பாபர் மசூதி கட்டினார் என்று கூறுகிறார்கள்.
மேலே உள்ள தகவல் உண்மையா என்று பார்ப்போம் 
இன்றைய உத்தர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் மாவட்டத்தில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை.
மேலும் இந்துக்களின் கால அளவை யுகம் என்று குறிப்பார்கள்.
 யுகங்கள் நான்கு.
அவையாவன:
1⃣கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது.
2⃣திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகள் கொண்டது.
3⃣துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் கொண்டது.
4⃣கலியுகம் 4,32,000 ஆண்டுகள் கொண்டது.
இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கலியுகம்.
இது கிறிஸ்து பிறப்பதற்கு 3,102 வருடங்களுக்கு முன் தொடங்குகிறது.
இதன்படி கலியுகம் தொடங்கி 5,110 ஆண்டுகள் நடக்கின்றன. கலியுகத்தில் ராமர் பிறக்கவில்லை.
இந்த திரேதா யுகத்தின் கடைசி வருடத்தில் ராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால்கூட 8,64,000 + 5,110 = 8,69,110 ஆண்டுகளுக்கு முன்புதான் ராமர் பிறந்தார் என்பது வால்மீகி எழுதிய ராமாயணத்தில் உள்ளது.
ராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந்தார்’ என்கிறது வால்மீகி ராமாயணம்.
அப்படியானால் எட்டு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் என்ற ஒன்று இருந்திருக்கவேண்டும்
 மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறை சார்பில் அயோத்தியின் வரலாற்றை ஆய்வுசெய்து, 1976-1977-ல் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
அதில் அறிக்கையின் 52, 53 பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700-ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடப்படுகிறது.
அதாவது 2,715 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க முடியும் .
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979-1980-ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்லியல் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார்.
 ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.
ராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு வரவேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2,708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல.
வேறு ஏதோ ஒரு பகுதியில்தான் அந்த அயோத்தி இருந்திருக்கவேண்டும்
ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரணமானதுதான்
 எனவே ராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கும் ராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
....................தொடரும்.

🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
அட்மின்மீடியா செய்தியை வாட்ஸ்அப்பில் இஸ்லாமிய குரூப்பில் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ள
📱9245581684
📱9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்:2.12.15

Give Us Your Feedback