Breaking News

வயதான குழந்தை செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

உங்கள் சிந்தனைக்கு ஓர் செய்தி



இறுதி நாளின் அடையாளமாக, வயதான குழந்தை நம் இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்துள்ளது. அல்குர்ஆனில் முஸம்மில் என்ற அத்தியாயத்தின்

 ஏகஇறைவனை நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில்1 எவ்வாறு தப்பிப்பீர்கள்?

திருக்குர்ஆன் 73:17

என்ற வசனத்தை குறிப்பிடப் பட்டுள்ளதை போல, வயதான ஏழை குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனுடைய இரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் அதன் வயது 105 ஆகும். என்ற செய்தியும் அந்த குழந்தையின் புகைப்படமும் வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது


வயதான தோற்றத்தில் ஒரு குழந்தை பிறந்தது உண்மைதான்
.
ஆனால் அந்த வசனத்தில் உள்ளதற்க்கும் அந்த செய்திக்கும் என்ன தொடர்பு

மறுமைநாள் நேருங்கும் போது குழந்தைகூட நரைத்த நிலையை அடையும் என்ற அர்த்தத்தில் தானே அந்த வசனம் வருகிறது

குர்ஆனில் இருந்து ஒரு செய்தியினை பரப்புவதற்கு முன் அதனை ஆராயமாட்டீர்களா❓

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 25:73💥

நம் அனைவரும் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா

சிந்திக்கும் ஆற்றலை நமக்கு அல்லாஹ் அளிக்கவில்லையா ✳

இந்த செய்தியினை அறிந்தவுடன் நம்மில் எத்தனை பேர் குழந்தை பிறந்த செய்தியினை பற்றி அதன் உண்மை தன்மையை அறிய ஆராய்ந்தோம்

கேள்விபட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்பது நபிமொழி 💥
இந்த நபிமொழியை யாரும் அறியவில்லையா ❓

இப்படி நாமாக குர்ஆனுடைய வசனத்தோடு அந்த வசனத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு நிகழ்வினை ஒப்பிட்டு கற்பனை செய்து அதனை பிறருக்கும் அனுப்புவது எவ்வளவு தவறென்று நீங்கள் அறியவில்லையா ❓

இப்படி அல்லாஹ் அந்த வசனத்தில் கூறாத செய்தியினை கூறியதுபோல் காட்டினால் அது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதை போன்று ஆகாதா❓

இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவிக்கும் கேடு தான்.
திருக்குர்ஆன் 45:7

இதன் பிறகும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோரே அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன் 3:94

மேற்கூறிய வசனங்களை நாம் அறியவில்லையா?

அன்பார்ந்த சகோதரர்களே அல்லாஹ்விற்கும் அவன் படைத்து வைத்துள்ள நரகத்தின் வேதனைக்கும் நாம் அஞ்ச வேண்டாமா❓

அவர்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் கூலி மிகவும் சிறந்தது. அவர்கள் அறிய வேண்டாமா?
திருக்குர்ஆன் 2:103

இதுபோன்ற செய்திகளை பார்த்த உடனே பரப்புகின்றோமா அதனால் நாம் அடைவது பொய்யன் என்ற நிலை

இஸ்லாமிய சொந்தங்களே இனிமேலாவது இது போன்ற செய்திகள் வரும் போது அதனுடைய முழு விவரத்தையும் அறிந்து பரப்பவதுதான் இஸ்லாமிய பண்பு



மேலும் தகவல்களுக்காக அந்த குழந்தையினுடைய விபரத்தினை கீழே தருகிறோம்

  • குழந்தை பிறப்பு : 30.05.2015

  • குழந்தை எடை : 800கிகி

  • பிறந்த இடம் : Wadia Hospital மும்பை

  • பாதிக்கப்பட்ட நோய் : Intra-Uterine Growth Retardation (IUGR)

  • குழந்தை தாய் :மம்தா தோதி

  • குழந்தை தந்தை : அஐய் தோதி

  • குழந்தை தாத்தா :திலிப் குனா தோதி(50) இவர் தான் இப்பொழுது குழந்தையை பராமரிக்கிறார் .

  • அந்த குழந்தைக்கு Intra-Uterine Growth Retardation (IUGR) என்னும் தோல் நோயின் தாக்கத்தினால் இந்த நிலை வந்துள்ளது .

  • தக்க சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குழந்தை நலமாக இருக்கிறது.

குர்ஆனுடைய வசனத்திற்கும் இக்குழந்தைக்கும் எந்த ஒரு சம்பந்தம் இல்லை

 1000 குழந்தைகளிள் ஒருவருக்கு வரும் நோய்.

இது சரி செய்ய கூடியது .

இக்குழந்தைக்கு
இரத்த பரிசோதனையில் 105 வயது என்று வரும் செய்தியும் உண்மை இல்லை

இஸ்லாமிய சொந்தங்களே இனிமேலாவது இது போன்ற செய்திகள் வரும் போது அதனுடைய முழு விவரத்தையும் அறிந்து பரப்புவோம்💥

அல்லாஹ் நம் அனைவருக்கும் அதிக அருளையும் ஞானத்தையும் வழங்குவானாக



அட்மின் மீடியா ஆதாரம் 1


அட்மின் மீடியா ஆதாரம் 2

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback