Breaking News

டெங்கிலிருந்து பாதுகாப்பது எப்படி

அட்மின் மீடியா
0

*டெங்கிலிருந்து நம்மை பாதுகாக்க..*

*📡அட்மின் மீடியா 📡*

💥பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்💥

💥 *விழிப்புணர்வு செய்தி*💥

🔮தமிழகம் முழுவதும் மழை  தொடர்ந்து பெய்து வருவதால் அட்மின் மீடியாவின் ஒரு சில நோய் எச்சரிக்கை மீள்பதிவு.

🔮மழை நின்றாலும் பல இடங்களில் மழை நீர் வடியவில்லை.

🔮தேங்கிய நீரில் இருந்து தொற்று நோய் கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது.

🔮அதனால் மழைநீர் தேங்கிய பகுதியிலும் சரி, வடிந்த பகுதியிலும் சரி பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

🔮தொற்று நோயில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவசியம்.

✅அதற்கான வழி முறைகள்...

✅ மழை நீர் வடிந்தாலும் சரி, வடியாவிட்டாலும் சரி மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிப்பது மிகவும் நல்லது.

✅நீரில் இருந்து தான் அதிகமாக  நோய் கிருமி தாக்குகிறது.

✅தண்ணீர் தொட்டி களில் தற்போது மழை நீரோடு கழிவு நீரும் கலந்து தேங்கி இருந்திருக்கும்.

✅அதனால் அனைவரும் தண்ணீர் தொட்டியினை பிளிச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்து அதன் பின்னர் பயன்படுத்த வேண்டும்.

✅ ஈக்கள் மூலமாகவும் நோய் பரவுகிறது எனவே ஈ  மொய்த்த பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது.

✅வீட்டின் அருகில்  சாக்கடை, கழிவுநீர் சாலைகளிலும், வீதிகளிலும் தேங்கி கிடந்தால்  அதில்  குளோரின் மற்றும் ‘பிளிச்சிங்’ பவுடர்களை தெளிக்க வேண்டும்.

🔮மழை காலங்களில் அனைவருக்குமே  பொதுவாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படும்.

🔮ஆனால்,  அதே சமயம் நம காய்ச்சல் டெங்கு காய்ச்சலோ என்று அச்சம் கொள்ள வேண்டாம் ஏனெனில்  அனைத்து காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல.

🔮டெங்கு காய்ச்சலை முறையான எலிசா பரிசோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய இயலும்

👹 டெங்கு பயம் இனி வேண்டாம்; மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்து விடுகிறது.

🔮டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.

🔰'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும். தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள்,பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன.

*👆🏼எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்.*

🔰சித்த மருத்துவத்தில் டெங்குவை தடுக்க எளிமையான வழிகள் இருக்கிறது. *நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும்.* இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவிலும்,
மெடிக்கல் கடையிலும்
வாங்கி பயன்படுத்தலாம்.

🔰மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம்.

🔰காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும்.

🔰வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்க விடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருந்துகளை தெளிக்கவும்.

🔰கை கால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.

🔰டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.

🔰தினசரி நிலவேம்பு கஷாயம் குடியுங்கள்.

🔰டெங்கு காய்ச்சலை வராமல் பாதுகாப்போம்.

🗣எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிறர் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவர்தான் (உண்மை) முஸ்லிம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

📓இறைநம்பிக்கை என்பது ”எழுபதுக்கும் அதிகமான’ அல்லது ”அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும்.

*அவற்றில் உயர்ந்தது ”அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும்.*

*அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான். (முஸ்லிம் 58)*

✴எனவே மேலே குறிப்பிட்ட வழிமுறை போல நாமும் சுத்தமாக இருப்போம்.
நம்மை சுற்றிலும் சுத்தமாக வைத்திருப்பது மூலமாக
அல்லாஹ் மறுமையில் தரும் வெகுமதியை பெற்றுகொள்வோம்
இன்ஷா அல்லாஹ்.

✍🏻 ​என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா​..

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள..

✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க..

*🗣 ​🅰DMIN ⓂEDIA​ வில் இணைய..*

📞9245581684

📞9894145692

*🗓 பதிவுநாள்: ​12.11.2017​*

​# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​​..

http://adminmedia1.blogspot.com

*​🅰DMIN ⓂEDIA​*

Give Us Your Feedback