இஸ்லாமியர்கள் புகைபடம் எடுக்கலாமா
*பத்வா*
*🅰 D M I N Ⓜ E D I A*
✍🏻 *சமூக வலை தளங்களில் இஸ்லாமியர்கள் புகைப்படங்கள் பதிவேற்ற தடை!!*
✍🏻 *சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் தங்களது புகைப்படம் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை பதிவேற்ற கூடாது என்று ஃபத்வா பிறப்பிக்கப்பட்டுள்ளது*
✍🏻 *உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் இயங்கி வரும் தரூல் உலூம் தேவ்பந்த் என்ற இஸ்லாமியப் பள்ளி இந்த ஃபத்வாவைப் பிறப்பித்துள்ளது.*
✍🏻 *பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனிப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாமா? என்று ஒருவர் தரூல் உலூம் பள்ளியிடம் கருத்து கேட்டிருந்தார்.*
✍🏻 *அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு ஃபத்வாவை அப்பள்ளி வெளியிட்டுள்ளது.*
✍🏻 *அதில் தனிப்பட்ட புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தினரின் புகைப்படங்களையோ சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்வதை இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கவில்லை.*
✍🏻 *எனவே அத்தகைய செயல்களில் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் ஈடுபடக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்கள்*
✍🏻 *இதுகுறித்து உ.பி. மதராஸாவின் மார்க்க சிந்தனையாளர் முஃப்தி தாரிக் காஸ்மி கூறுகையில்*
✍🏻 *புகைப்படங்கள் எடுப்பதையே இஸ்லாம் அணுமதிக்கவில்லை*
✍🏻 *இந்நிலையில் அவற்றை சமூக வலை தளங்களில் பகிர்வதை எப்படி ஏற்கும்''என்றார்*
✍🏻 *மேலும் பெண்களே அன்னிய ஆண்கள் பார்க்கவா உங்களை அல்லாஹ் படைத்துள்ளான் என்று கேள்வியும் கேட்டுள்ளார்*
.....................➖....................
🗓 பதிவுநாள்: 21.10.2017
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 ECHO DAWAH FOUNDATION📡