Breaking News

பீமனின் எலும்புகூடு

அட்மின் மீடியா
0
🅰DMIN EDIA
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
 மறுப்பு செய்தி 8⃣9⃣ 


ராமயானத்தில் கூறப்படும் பீமனின் எலும்புகூடு இந்திய ராணுவம் கண்டுபிடித்தாக இந்துக்களும்

பைபிள் கூறும் அரக்கனின் எலும்புகூடு கண்டுபிடித்ததாக கிறிஸ்தவர்களும்

அல்குரானில் சொல்லபடுகின்ற ஆது சமூக கூட்டத்தாரின்
எலும்புகூடுகளை கண்டுபிடித்ததாக முஸ்லீம்களும்

மேலும் அதனுடன் பல கதைகள் திரித்து அதனுடன் பெரிய மண்டை ஓடு உள்ள படமும்,எலும்புகூடு உள்ள படமும்
சேர்ந்து ஷேர் செய்கிறார்கள்

பல நாட்களாக இது போல் புகைபடம் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இது போல் வலம் வரும் எந்த செய்தியும் உண்மையில்லை

பல எலும்புகூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதே சமயம் இதுவரை மிகபெரியதாய் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
என்பது தான் உண்மை.

இன்றய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் பங்கு
அதிகமானது என்பது
அனைவரும் அறிந்தது.
 டிவிட்டர்,பேஸ்புக்,வாட்ஸப் போன்றவற்றில் எந்த அளவுக்கு உண்மையான தகவலை வேகமாக பரப்ப பயன்படுகிறதோ அதைவிட அதிகமாக பொய்யான, அவதூறான தகவல்கள் அதைவிட அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.

அப்படி பொய் என்று பரப்பபடும் செய்திகளில் இதுவும் ஒன்று.


இன்றய கணினி கிராபிக்ஸ் உலகில் அனைத்தும் சாத்தியமே

இதுபோல் பல லட்சம் புகைப்படங்கள் உருவாக்கி அதை இண்டர் நெட்டில் வெளியிட்டுள்ளார்கள்.

தங்கள் கணினி கிராபிக்ஸ் திறமையை வெளிப்படுத்தவும் பொழுதுபோக்குக்காகவும்
இது போன்ற புகைப்படங்கள் செய்து இருக்கிறார்கள்.

நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் பல லட்சம் புகைப்படங்கள்
உள்ளன.

எனவே இது போன்று கிராபிக்ஸ் செய்யப்பட்ட படங்களை அனைத்து படங்களையும் நீங்கள் ஜூம் செய்து பார்த்தாலே தெரியும்.
மேலும் இது சம்மந்தமான வீடியோவை பார்க்க


உலகில் இது போல் சம்பவங்கள் நடந்தால் எந்த மீடியாவும் சொல்லாமல் இருக்கமாட்டார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
எனவே பொய்யான செய்திகளை ஷேர் செய்ய வேண்டாம்
📓
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
(அல்குர்ஆன் : 2:42)
செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ள
📱9245581684
📱9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர
📡அட்மின்மீடியா 📡
📮பதிவு நாள்:30.12 .15

Give Us Your Feedback