இந்த வருடத்துகுறிய ரமலான் ஜுன் 6க்கு. ஆரம்பமாகிறது இன்ஷா-அல்லாஹ். ரமலானுக்கு இன்னும் 111 நாட்களே உள்ளன. கண்மணி நபி நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் நின்றார்கள், "யார் ஓருவர் ரமழானைப்பற்றிய செய்தியை பிறர்க்கு முதலில் கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாகிவிடும்" நான் உங்களுக்கு கூறியதுப்போல் தாங்களும் இச்செய்தியை பிறருக்கு பகிர்ந்து நரக நெருப்பை ஹராம் ஆக்கி கொள்ளுங்கள்..
🔹மேலே உள்ள இந்த செய்தி வருடா வருடம் பலராலும் ஷேர்செய்யப்படுகிறது.
🔹இது போல் நம் புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா
❓
🔹இது போல் ஹதீஸ்களில்
கூறப்பட்டுள்ளதா
❓
🔷நமது நபி ஸல் அவர்கள் தான் கூறி உள்ளார்களா
❓
🔷இல்லையே பிறகு ஏன் இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புகிறோம்
❓
✳இந்த செய்தின்யை நான் பரப்பிவிட்டால் எனக்கு சொர்க்கம் கிடைத்துவிடுமா
❓
✳அப்படியென்றால் வாழ்நாள் முழுவதும் தொழுகை,நோன்பு, ஹஜ் மற்றும் இன்ன பிற நல் அமல்கள் எதற்கு
❓
✳நாம் சிந்திக்க வேண்டாமா
❓
✅இது போல் பொய்யான செய்திகளை பரப்புகிறவர்கள் பற்றி குர்ஆன் கூறுவதாவது
📚இப்புவியிலிருப்பவர்
களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உங்களை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. அன்றி, (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 6:116)
✳சொர்க்கவாசிகளை அல்லாஹ் தான் அறிவான்.
✳நமது அமல்களை ஒப்புகொள்வது அவன் பொருப்பில் உள்ளது.மேலும் அல்லாஹ்வே கூலி கொடுப்பவனும் தீர்ப்பு செய்பவனாவான்.
✳எனவே இது போன்று மார்க்கத்தின் பேரில் பொய்யை பரப்பி மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்.
📚உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 16:116)
🔹இஸ்லாத்தில் சொல்லாத இதுப்போல பொய் பிரச்சாரங்களை செய்வதில் நமக்கு கேடுதான்..!
🔷கேள்விப்பட்டதை பரப்புபவன் பொய்யன் என நபிமொழி உள்ளதே அதை மறந்து நமது சகோதரர்கள் இப்படி பொய்யை பரப்புகிறார்களே அது ஏன்
❓
🔹சிந்திக்க வேண்டாமா
❓
📚நான் சொல்லாத ஒன்றை என் மீது யார் இட்டுக்கட்டிக் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
---புகாரி ஹதீஸ் 31
🔷எனவே மார்க்கத்தின் பெயரால் வரும் சந்தேக செய்திகளை ஆராய்ந்து பகிருங்கள்.இல்லையேல் விட்டு விடுங்கள். பாவத்தில் சிக்கமாலிருக்கலாம்.
📱அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9944424749
📮பதிவு நாள்: 23/03/2016
📱பேஸ்புக்கில் எம்மை தொடர
👇
🅰DMIN
ⓂEDIA
Part of
👇
📡ECHO DAWAH FOUDATION
📡