Breaking News

ஆதம் அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்த ஆடை

அட்மின் மீடியா
0
📡 🅰DMIN EDIA 📡
💠பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்💠
🚫 மறுப்பு செய்தி 🚫
கடந்த சில நாட்களாக
வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் வலம் வரும் செய்தி
ஆதம் அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்த ஆடை இது என்றும்
👢அவர்களின் பாத சுவடு
என்றும்,
அவர்களின் அடக்கஸ்தலம் என்றும் புகைப்படங்களும் வருகிறது.
அவை அனைத்தும் பொய்யானது.
பொய்யான கட்டுகதைகள்.
🔻ஆதாம் நபி அவர்கள்
🔻இந்த உலகின் முதல் மனிதர் ஆவார்
🔻அவர்கள் காலத்தில்
தையல் மிஷின் இருந்ததாக எந்த வித ஆதாரமும் இல்லை
இந்த உலகில் தையல் மிஷின் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1755.
🔻அவர்கள் காலத்தில்
பட்டன் இல்லை
🔻அவர்கள் காலத்தில்
நூல் இல்லை
பட்டன் கண்டுபிடித்து 5000 ஆண்டுகள் தான் ஆகிறது
அப்படியானால் அவ்வளவு பெரிய அந்த சட்டை யாருடயது
கடந்த 2009 ஆண்டு
சவுதி அரேபியாவில் டைய்லர் ஒருவர்
ஆதம் நபி அவர்கள் தற்போது இருந்தால் சட்டை எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்
என்று தைத்து பொதுமக்கள் பார்வைக்கு காட்டப்பட்டது அந்த சட்டை தான் அது
மேலும் அதில் வரும் மற்றும் ஓர் புகைப்படம் இது தான் ஆதம் நபி அவர்களின் அடக்கஸ்தலம் என்று
அதுவும் பொய் அந்த அடக்கஸ்தலம்
இம்ரான் நபி ஸல் அவர்களின் அடக்கஸ்தலம் ஆகும் அந்த அடக்கஸ்தலம் ஓமன் நாட்டில் உள்ளது
அந்த கால் தடமும் பொய்யானது .
🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫
🔻இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தராத இது போன்ற பொய்யான கட்டுக்கதைகளை நம்பி யாரும் இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்பாதீர்.
இது போல் செய்திகள் அனுப்பி மக்களை முட்டாள்களாக ஆக்காதீர்கள்
இது போன்ற எந்த மூடத்தனமான செய்திக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..
இது போன்ற அடிப்படை ஆதாரமில்லா எந்த செய்தியையும் விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ள வேண்டாம்...
இத்தகயோரை பற்றி அல்லாஹ் குர்ஆனில்
📗மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 2:78)
அல்லாஹ்வை அஞ்சி கொள்ள மாட்டீர்களா
💥கேள்வி பட்டதையெல்லாம் அதனை ஆராயாமல் பரப்புபவன் பொய்யன் என்பது நபிமொழி
ஆதம் நபி அவர்கள் 60 முழம் உயரம் உள்ளவர்கள் என்று ஹதீஸ் கூறுகிறது.
அதற்காக அவரை பற்றி யார் கட்டுக்கதை கட்டினாலும் அதை நம்பி பரப்புவது தான் மூஃமீனின் செயலா
📚இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறவர் தம் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 6197
எனவே இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்புவதற்கு முன் அதன் உண்மை தன்மை அறிந்து பகிரவும்.
செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிந்து கொள்ள
அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
📱9245581684
📱9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர
📮பதிவு நாள்:12.1 .16
📡 அட்மின்மீடியா 📡

Give Us Your Feedback