Breaking News

ஒற்றை கண் குழந்தை தஜ்ஜாலா

அட்மின் மீடியா
0
ஒற்றை கண் குழந்தை தஜ்ஜால் பிறந்துவிட்டார். உலகஅழிவு ஆரம்பமாகிவிட்டது. என்றும் அதனுடன் ஒரு வீடியோவும் சில மார்க்கம் தெரியாத மூடர்களால் பரப்பபடுகின்றது 


அது உண்மையா ??? உண்மை என்ன என்று தெரியாமல் ஷேர் செய்பவர்களே தெரிந்து கொள்ளுங்கள்

2006 செப்டம்பர் மாதம் சென்னையில்  பிறந்த அந்த ஒற்றை கண் குழந்தை சைக்லோபியா (Cyclopia) என்ற நோயினால் பாதிக்கப்பட்டு பிறந்ததாகும் குழந்தை பிறந்து 1 மாதத்திற்குள் இறந்துவிட்டது

ஆதாரம்


இக்குழந்தைக்கு பெயர் கூட சூட்டவில்லை, மருத்துவமனையில் "கோமதியின் குழந்தை" என்று தான் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.

சைக்லோபியா நோயினால் தீவிர சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் எந்த குழந்தை மருத்துவ உதவி எதுவும் பயன் இன்றி  இறந்து விட்டது. Cyclopia என்பது மிகவும் அறிதான நோய், இது மில்லையனில் ஒரு குழந்தைக்கு தான் ஏற்படும் 

மேலும் இது போன்று இந்தியாவில் மார்ச், 2011 இல் ஒரு குழந்தை பிறந்ததாகவும், பிறந்து 24 மணி நேரத்தில் இறந்துவிட்டதாகவும் ஆய்வு அறிக்கை கூறுகிறது. 

இஸ்ரேலில் 2011ம் ஆண்டு ஒர் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் செய்தி உள்ளது.

இந்த ஒற்றை கண் குழந்தை தஜ்ஜாலா ஒற்றைகண் குழந்தை தஜ்ஜால் இல்லை  என்பதை அட்மின் மீடியா மூலமாக உங்களுக்கு தெளிவு படுத்துகின்றோம்

தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பி இருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதை, தமீமுத்தாரி(ரலி) அவர்களின் மூலமாக நாம் அறியலாம். இதை நபி(ஸல்) அவர்களும் உறுதிபடுத்தியுள்ளார்கள். 

✍இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.

(நூல்: முஸ்லிம் 5235.)

ஹதீஸ் விரிவாக கீழே உள்ள லின்ங்கில் காணலாம்

 
ஆக தஜ்ஜால் இனி பிறக்கமாட்டான் ற்கனவே பிறந்துவிட்டான் அவனுக்கு இரண்டு கண்ணில் ஒன்று குருடு உண்மை இப்படி இருக்க மார்க்கத்தின் பெயரால் கட்டு கதைகளை பரப்பாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback