Breaking News

தனியார் பள்ளியில் உங்கள் குழந்தைகள் இலவசமாக படிக்க

அட்மின் மீடியா
0

*இலவசமாக தனியார் பள்ளியில் உங்கள் குழந்தைகள் படிக்க*

📡 *அட்மின்மீடியா*📡

🗣எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு பள்ளி வாரியாக காலியிடம் அறிவிப்பு.!!!

🗣தனியார் மெட்ரிக் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இலவச சேர்க்கைக்கான காலியிடங்கள் பட்டியலை, தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ளது.

🗣மத்திய அரசின் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,

🗣தனியார் பள்ளிகளில், நுழைவு வகுப்பான ஒன்றாம் வகுப்பில், மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, நலிந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.

🗣அவர்களுக்கான
கல்வி கட்டணத்தை, தமிழக அரசே பள்ளிகளுக்கு செலுத்தும்.

🗣அதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கை, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்புக்கு நடத்தப்பட உள்ளது.

🗣தேர்வுத்துறை இணையதளம் மூலம், ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.

🗣ஏப்., 20 முதல், மே, 18 வரை பதிவு செய்யலாம்.

🗣அதன்பின், குலுக்கல் முறையில் வெளிப்படை தன்மையுடன், மாணவர்கள் தேர்வு
செய்யப்படுவர்.

🗣இந்த இடங்களின் பட்டியலை, பள்ளிகள் வாரியாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.

🗣தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாவட்ட வாரியாக எந்த பள்ளியில், எத்தனை இடங்கள் உள்ளன;

🗣அவற்றில், இலவச சேர்க்கைக்கான இடங்கள் எத்தனை என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

🗣 *உங்கள் குழந்தைகளின்  சேர்க்கைக்கும்*

🗣 *மேலதிக தகவல்களுக்கும்*

🗣  உங்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு  உடனே செல்லுங்கள்

➖🔮➖🔮➖🔮➖🔮➖🔮

🗓 பதிவுநாள்:

*14.04.2017*

*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*

http://adminmedia1.blogspot.com

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback