கேரள பெண் கற்பழித்து கொலை செய்தி உண்மையா
அட்மின் மீடியா
0
*பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கின்றது என்பது தெரியுமா உங்களுக்கு*
✍கேரளாவில் ஒரு முஸ்லிம் பெண் மாற்று மதத்தவர் கூட திருமணம் செய்ததாகவும்
✍பின்னர் அந்த முஸ்லிம் பெண்ணை அவன் கற்பழித்து கொலை செய்துள்ளதாகவும் மலையாள மொழியில் ஆடியோ பரவுகிறது.
✍அந்த ஆடியோவின் கூடவே பெண்ணின் போட்டோவும் பலரால் ஷேர் செய்யபடுகின்றது.
*இந்த செய்தி உண்மையா*
*பதில்* = பொய்யான செய்தி
*உண்மை என்ன* ஆதாரம் என்ன
பாலக்காடு சர்வீஸ் ரோட்டில் ஐம்பது வயது மதிக்க தக்க பெண்ணின் சடலம் கிடைக்கப் பெற்றது.
அடையாளம் யார் என்று தெரியவில்லை. மாவட்ட சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 27.03.2017 அன்று நடந்தது.
இந்த சம்பவம் 27.03.2017 அன்று நடந்தது.
காவல்துறையினர் முதல்கட்டமாக இது விபத்து என்றும்
இறந்து போன பெண் சிகப்பு கலர் புடவை அணிந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள்
✅ கேரளாவில் ஓர் முஸ்லிம் பெண் மாற்று மத சகோதரருடன் சென்றது உண்மை தான்.
✅ பிணமாக கிடைத்த பெண் 50 வயது மதிக்கதக்க பெண் ஆனால் மாற்று மத சகோதரருடன் சென்ற பெண்னுக்கு சுமார் 20 வயது இருக்கும்.
எனவே இந்த பெண் அந்த பெண் இல்லை
*யாரும் பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள்*
இறந்து போன பெண் பற்றி பாலகாடு kasaba போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உண்மை தகவல் கிடைத்தால் ஷேர் செய்கின்றோம்.
*ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம்(பிறருக்கு)அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.*
அறிவிப்பவர் :
அபூ ஹூரைரா(ரலி)
நூல் : முஸ்லிம் - 6
Tags: மறுப்பு செய்தி