காபாவின் மேல் நிலா வெளிச்சம் உண்மையா
அட்மின் மீடியா
0
*பொய்யர்களே சிந்திக்கமாட்டீர்களா*
⭕இன்று இரவு நிலாவோட வெளிச்சம் கஃபா மேல் வீசும் அதனால் இன்றைக்கு என்ன துஆ
கேட்டாலும் நடக்கும்
{{{ ரப்பி மின்குல்லி ஜம்பி வாதுபிலைஹி }}},,
இந்த துஆவ 10பேருக்கு அனுப்புங்க உங்க எல்லா
கஷ்டமும்
சரியாகிவிடும்
அல்லாஹ் மேல் நம்பிக்கை
இருந்தா பார்வேட் பண்ணுங்க நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள் !!!
கேட்டாலும் நடக்கும்
{{{ ரப்பி மின்குல்லி ஜம்பி வாதுபிலைஹி }}},,
இந்த துஆவ 10பேருக்கு அனுப்புங்க உங்க எல்லா
கஷ்டமும்
சரியாகிவிடும்
அல்லாஹ் மேல் நம்பிக்கை
இருந்தா பார்வேட் பண்ணுங்க நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள் !!!
➖⭕➖⭕➖⭕➖⭕➖
நம்மில் பலரும் இது போன்ற ஆதாரமற்ற செய்தியினை பலருக்கு ஷேர் செய்து கொண்டு இருக்கின்றோம்
இந்த செய்தி பொய்யானது
இது போன்று மார்க்கத்தில் இல்லாத செய்திகளை மார்க்கம் என்ற பெயரில் பரப்ப வேண்டாம்.
நிலா வெளிச்சம் காஃவாவின் மீது படும் நாள் சிறப்பான நாள் என்பதற்கு ஆதாரம் என்ன?
இன்று தான் காஃபாவின் மீது நிலா வெளிச்சம் படும் என்றால் மற்ற நாட்களில் காஃபாவின் மீது வெளிச்சம் படாது என்பதற்கு ஆதாரம் என்ன?
கடந்த 2 வருட காலமாக இந்த செய்தி பரவுகிறது,
எனவே 'இன்று' என்பது எந்த நாளை குறிக்கிறது?
மார்க்கத்தில் ஒரு செயலை இபாதத் என அங்கீகாரம் வழங்குவது அல்லது குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட நாளில் செய்யும் செயலை இபாதத் அல்லது சிறப்பு என்பதற்கு அங்கிகாரம் வழங்கும் தகுதி குர்ஆன் அல்லது ஹதீஸை தவிர வேறு எவருக்கும் அருகதை இல்லை.
நிலைமை இப்படி இருக்க இங்கு நீங்கள் குறிப்பிடும் அந்த காஃபாவில் நிலா வெளிச்சம் படும் நாளில் 10 பேருக்கு துஆவை சொல்லி கொடுத்தால் அல்லது அனுப்பி வைத்தால் கஷ்டம் எல்லாம் நீங்கும் என்று அங்கீகாரம் வழங்குவதற்கு நீங்கள் யார்?
ஒரு வேலை நீங்கள் அனுப்பிய பதிவு குர்ஆன் அல்லது ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் ஆதாரம் எங்கே?
மார்க்கத்தில் இல்லாத விஷயங்களை மார்க்கமாக சித்தரித்து குர்ஆன் அல்லது ஹதீஸை இட்டுக்கட்டிய பாவத்திற்கு ஆளாகி விடாதீர்கள்.
இந்த ஒரு பதிவே நாம் செய்த இபாதத்கள் அனைத்தையும் அழித்து விட்டு நம்மை நரகத்திற்கு அழைத்து செல்ல காரணமாக அமையலாம்.
அஸ்தஃபிருல்லாஹ்....
நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்”
*அல்குர் ஆன் 16:105*
இஸ்லாத்தின் ஆதாரம் குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே தவிர கட்டுகதைகள் அல்ல.
Tags: மறுப்பு செய்தி
