Breaking News

பேஸ்புக் காதலின் விளைவு

அட்மின் மீடியா
0

*பேஸ்புக் காதலின் விளைவு*

📡அட்மின்மீடியா📡

🔅 ​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்​

💻பேஸ்புக் காதலனை நம்பி வந்து ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் தவித்த சூளகிரியை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்.

🚌சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று இரவு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனியாக கையில் துணிகளோடு நின்று அழுது கொண்டு இருந்தார்.

👥 இதைபார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணிடம் விசாரித்துள்ளனர். ஆனால், யாரிடமும் அந்த பெண் சரியாக பேசாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

🚔விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

🎥  *பிளஸ் 2 வரை படித்துள்ள அப்பெண் பேஸ்புக் பயன்படுத்தியுள்ளார். அதில் ஆண் நண்பர்களை இணைத்துள்ளார்*.

📞அவ்வாறு பேசியதில் ஓமலூரை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

📲 *இருவரும் கடந்த ஓராண்டாக பேஸ்புக் மூலம் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.*

☎நேற்று துணிமணிகளை எடுத்துகொண்டு ஓமலூர் வந்துவிடுமாறு கார்த்தி கூறியுள்ளார்.

⏳இதை நம்பி ஓமலூர் வந்த அப்பெண்னை கார்த்தியும் அவரது நண்பர் ஒருவரும் வந்து அழைத்து சென்றுள்ளனர். இருவரும் அந்த பெண்ணை மாலை வரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஊரை சுற்றிவிட்டு ஓமலூர் வந்துள்ளனர்.

🚌பின்னர் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டு இங்கேயே இரு, நாங்கள் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கான பணத்தை எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளனர்.

🕔 *சுமார் 5 மணி நேரமாக காத்திருந்தும் அவர்கள் வரவில்லை. அவர்களது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.* இதனால், பயந்து போய் அழுதுகொண்டு இருந்ததாக கூறியுள்ளார்.

💢இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிய போலீசார் முன்பின் தெரியாதவர்களை நம்பி, பெற்றோர்களை தவிக்கவிட வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கி சூளகிரிக்கு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

*இது செய்தி மட்டுமல்ல, இதைப் பற்றிய எச்சரிக்கை செய்திகளை அட்மின் மீடியா சார்பில் பல முறை வெளியிட்டு வருகிறோம்.*

👉🏼எனவே பெண்களே எச்சரிக்கை தேவை

👉🏼எக்காரணம் கொண்டும் அன்னிய ஆண்களிடம்  பழகாதீர்கள்.

❇ *தந்தை, உடன்பிறந்த சகோதரர்கள் போன்ற உறவுகளைத் தவிர மற்ற ஆண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.*

✳ *ஒரு ஆணுடன் ஒரு பெண் தனித்து இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான்( மனங்களில் தவறான எண்ணங்களை உருவாக்கி தவறு செய்ய தூண்டுபவன்) இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒற்றை வரியில் காரணத்தையும்  தீர்வையும்  சொல்லிவிட்டார்கள். அதுதான் ஒரே தீர்வாகும்.*

......................➖....................

🗓 பதிவுநாள்: 05.11.2016

​​அட்மின் மீடியாவில் இணைய​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 ​​​​ECHO DAWAH FOUNDATION​​​​📡

Give Us Your Feedback