எண்ணெய் குளியல்
*மறந்து விட்ட ஒன்று*
அட்மின்மீடியா
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்.
*எண்ணெய் குளியல்*
அரக்கப்பறக்கக் குளித்துவிட்டு ஆபீஸை நோக்கிப் பயணிக்கும் நாம்,
*வாரத்தில் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னதை மறந்துவிட்டோம்*
_அதனால் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணமல்போய்விட்டது_.
*நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது*.
_முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது_.
_இந்த இரண்டுமே நம் சருமத்தையும் முடியையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன_.
_*வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்*_.
பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன.
*எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.*
_*எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் உகந்தது*_.
நல்லெண்ணெயை மிதமான சூட்டில் சூடுபடுத்தி,
முதலில் தலையின் உச்சியில் சூடுபறக்கத் தேய்க்க வேண்டும்.
பிறகு, உடலின் ஒவ்வொரு பாகத்திலும் மெள்ள மெள்ள தேய்த்துவிட வேண்டும்.
பின் வெதுவெதுப்பான நீரில் சீகக்காய் போட்டு குளித்தால் நல்லது.
*வறண்ட தோல் உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம்.*
*உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும்*.
உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்.