Breaking News

பேஸ்புக்கினால் வரும் தீமைகள்

அட்மின் மீடியா
0

*பேஸ்புக்கினால் வரும் தீமைகள் என்ன*

📡அட்மின்மீடியா📡

🔅 ​பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்​.

    🔰        *பகுதி*        7⃣

😎 தற்பொழுது பேஸ்புக் ஆண்கள் மற்றும் பெண்களை சமுதாயத்தில் பலரையும் தற்பெருமை மிக்கவர்களாக உருவாக்குகின்றது.

🎥 *தங்களின் இயல்பான வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை , புகைப்படம் , வீடியோ மூலம் பகிர்ந்துக்கொள்ளுதல் என்பது ஏற்றுகொள்ளகூடியதாக இருந்தாலும் , அதைவிட அதிகமாக தன் நிலைமைக்கு மீறிய இயல்புவாழ்கைக்கு புறம்பான ஒரு பெருமையான உலகை காண்பிக்கும் வகையிலேயே தகவல்கள் பதியப்படுகின்றது*.

📟 _வங்கி மற்றும் பிற முக்கிய இடங்களில் தர வேண்டிய நம் தகவல்களான பிறந்த நாள் , மற்றும் பலவித இரகசியம் காக்க வேண்டிய தகவல்களையும் பொதுவில் வைத்து விடுகின்றோம்._

👉🏼இதனால், *தகவல் திருட்டு மூலம் பலவிதமான இழப்புகள் ஏற்பட காரணமாக அமைகின்றது*.

🗣 *நாம் பேஸ்புக்கில் பகிரும் தகவல்களை பயன்படுத்தி நாமே அறிந்திராத சில சமூக விரோதிகள் நம் நண்பர்களிடமோ , உறவினர்களிடமோ மோசடிகள் செய்வதற்கு வழிவகுக்குகின்றது*. 

♻மாணவர்கள்  பேஸ்புக்கினாலும் , இணையவழி விளையாட்டுக்கள் என சமூக வலைத்தளங்களில் அதிகமான நேரங்கள் சிலவிடுகின்றனர்.

🙇🏻அதனால்  அதிகமான நேரம் கணினி அல்லது அலைபேசியினை உற்று நோக்குவதாலும், கண் பாதிப்புகளும் ஏற்படுகின்றது .

🗣 மனதளவிலும் அவர்களின் எண்ணங்கள் எப்பொழுதும் அதையே சிந்திக்கின்றதாக உளவியல் நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்.

🚫இந்த சமூக வலைத்தளங்கள்  மாணவர்களை தன்வயப்படுத்தி, அவர்களின் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் அவர்களை பிரித்து வைக்கின்றது.

♨ *அவர்களின் அதிகமான நேரங்களை ஆக்கரமித்து, அவசியமான காரியங்களையும் கூட பிற்படுத்தவும், மறக்கவும் செய்கின்றது*.

✍🏼 _*சிலர் அன்றாட நிகழ்வுகளை பேஸ்புக்கில் பகிர்தல் மூலம் , தீயவர்கள் பலவித மோசடிகள் செய்கின்றனர்*.

⏩ _*ஒருவீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதை ஆராய்ந்த காவல் துறையினர், கொள்ளை அடித்தவர்களை கண்டுபிடித்து விசாரணை செய்கையில், அந்த வீட்டு பெண் , சமூக வலைத்தளத்தில் தாங்கள் விடுமுறையில் சுற்றுபயணம் செல்வதாகவும், குறிப்பிட்ட சில தினங்களுக்கு வெளியூரில் இருப்பதாக பகிந்திருந்தையும் வைத்து, அந்த வீட்டில் யாரும் இருக்க வழியில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு, கொள்ளை அடித்தோம் என்பதாக கூறியுள்ளனர்*_.

🕸 வீட்டிற்கு வந்திருக்கும் உறவினர்களுடன் கலந்துரையாடாமல், உறவாடாமல், எப்பொழுதும் இணையத்திலேயே ஒன்றியிருக்க செய்து, உறவினர்களை இழக்க செய்கின்றது.

🕸 சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்த வேண்டும்

🔰 _*குறிப்பாகப் பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்*_.

⭕ *எங்கேயும் நல்லவர்களும் இருக்கிறார்கள், மோசமானவர்களும் இருக்கிறார்கள்*.

♻ இதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நம் நிம்மதி அடங்கி இருக்கிறது.

......................➖....................

🗓 பதிவுநாள்: *15.11.2016*

​​அட்மின் மீடியாவில் இணைய​​

☎9245581684

☎9894145692

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 ​​​​ECHO DAWAH FOUNDATION​​​​📡

Give Us Your Feedback