பேஸ்புக் வாட்ஸ்ப்பினால் வாழ்க்கையே கெடும் அபாயம
*பேஸ்புக் வாட்ஸ்ப்பினால் வாழ்க்கையே கெடும் அபாயம்*
📡அட்மின்மீடியா📡
🔅 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்.
♻ *பகுதி* - 6⃣
🗣 *சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன*.
👥 _சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது._
🗣இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை _*யாராலும் மறுக்க இயலாது.*_
🗣 *பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக உள்ளன.*
🚫 *ஆனால்*
💻 பேஸ்புக் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
♨ _சில நல்லவர்களையும் தீய செயலில் ஈடு படவைக்கின்றது._
🖥 ~ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர்.~
🙇🏻 *இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன*.
✍🏼ஏமாற்று வேலைகள்
மட்டுமின்றி பேஸ்புக்கில் தொடர்பு ஏற்படுத்தி சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர்.
👯 _ஒருவரே பல பெண்களை மணந்து கொள்ளும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன._
🎩 *சில பெண்கள் சமூக வலைதளங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்*.
🕸 குற்றங்கள்
சமூக வலைதளங்களின் உலகலாவிய தொடர்புகளால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் போலிசாருக்கு கூட சிக்கல் ஏற்படுகிறது.
👉🏼 *எனவே பெண்களே* ❕
🎛 _*தொழில் நுட்பவளர்ச்சி அனைத்திலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன.*_
❌ ஆதலால் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தவிர்த்துவிட முடியாது
✅ _ஆனால் அவற்றிலிருந்து நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும் பக்குவத்தையும் நாம் பெறவேண்டும்._
❎ *இருந்தாலும் குறிப்பாக இந்த பேஸ்புக் பயன்பாடு தீமைக்கு தான் முதன்மை இடத்தை கொடுக்கிறது.*
⭕ஆதலால் நன்மை தீமைகளை புரிந்து பேஸ்புக்கை பயன்படுத்த தெரியவேண்டும். இல்லையென்றால் பேஸ்புக்கை விட்டு *வெளியேறுவதே சிறந்தது*.
♨ *தொடரும்*
......................➖....................
🗓 பதிவுநாள்: *14.11.2016*
அட்மின் மீடியாவில் இணைய
☎9245581684
☎9894145692
# மேலும் எங்கள் செய்திகளை அறிய
http://adminmedia1.blogspot.com
Part of ⏬
📡 ECHO DAWAH FOUNDATION📡