மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் செய்தி !! யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா
0
dear friends.....!!!! காலம் நெருங்கி விட்டது.அதன் அடையாளமாக வானத்தில்☁ ஒரு நட்சத்திரத்தைக்⭐⭐ கூட பார்க்க முடியாது.தஃபாவுடைய கதவுகள் மூடப்படும். குர் ஆன் ஷரிபில் எழுத்துக்கள் மறைந்து விடும். சூரியன் ? மறைந்து விடும் உயரத்தில் உதயமாகும். ரசூல் (ஸல்)அலை அவர்கள் கூறுகிரார். இதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவேர்க்கு கியாமத் நாளில் அல்லாஹ் சொர்க்கத்தில் இடம் கிடைக்க செய்வான்.இந்த விபரங்களை அடுத்தவர்களுக்கு சொல்லாமல் போனால் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்காமல் ❌ போகும்.
இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தராத இது போன்ற பொய்யான கட்டுக்கதைகளை நம்பி யாரும் இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்பாதீர்.
இது போல் செய்திகள் அனுப்பி மக்களை முட்டாள்களாக ஆக்காதீர்கள் இந்த ஓரு Msg மூலம் சுவர்க்கம் கிடைத்து விடும் என்றால் அப்போ தொழுகை எதற்க்கு
ஹஜ் எதற்க்கு
ஜகாத் எதற்க்கு
இன்னும் பிற நல் அமல்கள் எதற்க்கு
அல்லாஹ்வை நம்பாமல் யாரை நம்ப போகிறீர்கள்
இது போன்ற இந்த மூடத்தனமான செய்திக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்
கேள்வி பட்டதையெல்லாம் அதனை ஆராயாமல் பரப்புபவன் பொய்யன் என்பது நபிமொழி மேலும் இது போன்ற குர்ஆன் ஹதீஸ் ஆதாரமில்லா செய்திகளை பரப்பினால் நரகத்தில் தான் தண்டனை கிடைக்கும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறவர் தம் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 6197
எனவே இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்புவதற்கு முன் அதன் உண்மை தன்மை அறிந்து பகிரவும்.இல்லையேல் விட்டுவிடுங்கள். பாவத்தில் சிக்காமலிருக்கலாம்.
Tags: மறுப்பு செய்தி
