Breaking News

சிறைவாசிகள் நிலை பற்றிய

அட்மின் மீடியா
0

*​எத்தனை குடும்பத்தில் இந்த நிலை தெரியுமா????​*

📡 ​அட்மின் மீடியா​ 📡

🔅பிஸ்மில்லாஹிர் ரஹ்மானீர் ரஹீம்

➡எந்த தவறையும் செய்யாமல் இளம் வயதில் சிறைக்கு சென்ற முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்களில்  நடக்கும் கண்களை குளம் ஆக்கும் சம்பவங்களில் ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

➡என்றாவது ஒருநாள் தன் மகன் நிரபராதி என்பதை உறுதி செய்து அரசு  விடுதலை செய்யும் திரும்பும் அவர்களுடன் இணைந்து வாழ தான் போகிறோம் என்று காத்து கிடக்கும் முஸ்லிம் சமூதாயத்தின் பரிதாப நிலை இதோ

➡நடை பாதையில் சாலையில் காய்கறி கடை போட்டு இருக்கும் முதியவர்
இரும்பியபடி தனது தள்ளாடிய குரலில் காய்கறி விலை கூவி அழைக்கிறார்

*குமரன்:* பெரியவரே! நானும் இரண்டு நாளா பாக்குறேன் இந்த தல்லாத வயசுலயும் சுட்டெரிக்கும்  வெயிலில் வியாபாரம்  செய்றீங்க

*பெரியவர்:* ஆமா தம்பி குடும்ப சூழ்நிலை அப்படி

*குமரன்:* உங்களுக்கு மகன் இல்லையா பெரியவரே?

*பெரியவர்:* சட்டென்று கலங்கிய குரலில் என் மகன் சிறையில் இருக்கிறான் தம்பி

*குமரன்:* உங்கள் மகன் என்ன தவறு செய்தார்? பெரியவரே

*பெரியவர்:* ஒரே ஒரு தவறு தான்..  என் மகனின் பெயர் அப்துல்லாஹ்

*குமரன்*: என்ன சொல்லுரீங்க பெரியவரே!

*பெரியவர்:* ஆம், முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக

➡அவன் செய்யாத குற்றத்திற்கு விசாரனை என்று அழைத்து சென்றார்கள்

➡அவன் மேல் பொய் வழக்குபோட்டார்கள்..

➡ *இது வரை தண்டனையும் கொடுக்கவில்லை*

➡தன் மகன் இன்று  வருவான்
நாளை வருவான்
என்று எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்தே கடைசியில் தன் மகனை பார்க்காமலயே என் மனைவி அவன் தாய் இறந்துவிட்டாள்..

➡தன் அப்பாவை எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கும் அவன் மகன்,

➡கணவனை எதிர்ப்பார்க்கும் அவன் மனைவி,

➡அண்ணன் பாசத்திற்காக ஏங்கும் என் மகள் அவன்  தங்கை.

➡ இப்படி ஆயிரம் உறவுகள் தினம்தோறும் என் மகனை எதிர்ப்பார்த்து கொண்டே இருக்கிறோம்..

*எப்ப விடுவாங்கனும் தெரியல.!!*

*​​குமரன்​​*

ஏன் பெரியவரே
கோர்ட் இருக்கு அங்க போனா நீதி கிடைக்குமே.!!

*​பெரியவர்​*

➡குற்றம் செய்தவர்களை கூட இந்திய தண்டனைச் சட்டத்தின் படி சிறையில் 14 வருடத்திற்கு மேல் இருந்தால் அவர்களை விடுதலை செய்கிறார்கள்

➡ஆனால் எந்த தப்பும் செய்யாம விசாரனை கைதியாகவே 15 வருஷம் இருக்கான் அதை கூட செய்யமாட்றாங்க தம்பி.!!

➡நீதி மன்றமே நீதி மறுத்தால் எங்கே போவது தம்பி.!!

*​குமரன்​*

நீதிமன்றத்தில் நீதி மறுக்கபட்டால் என்ன செய்வது பெரியவரே

*​பெரியவர்​*

➡வருடம் தோறும் தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில்
10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்றாங்க.!

➡நமது தமிழக முதல்வர் அவர்கள்
161 வது பிரிவு படி விடுதலை செய்வாங்கனு நம்பிக்கையோட காத்துட்டு இருக்கேன் தம்பி.!

➡இந்த வருஷம் பக்ரீத்
என் பையன் கூட தான் நடக்கணும்னு  இறைவனிடம்  வேண்டி கொண்டு இருக்கேன் தம்பி.!!

➡சிறைவாசிகளின் நிலையை கேட்ட குமரன் கண்களில் வரும்  கண்ணீரை அடக்கமுடியாமால் அவரையும் மீறி அவரின் கண்களில் கண்ணீர் வந்தது .

சொந்தங்களே

*நம் ரத்தம் கொதிக்கின்றது...!!*

*கண்ணீர் வருகின்றது!!*
➡இதை தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று யார் சொன்னது.!!

➡உலகின் மிகப்பெரிய *ஆயுதம்*நம்மிடம் தான் உள்ளது*

➡*மிகப்பெரும் ஆயுதம் *துவா*!!

ஆம்.!!

➡துவா கொண்டு நாம் நம் சகோதரர்களுக்கு உதவு செய்வோம்.!!

இன்ஷா அல்லாஹ்.!!

நம் சகோதரர்கள் *விடுதலை உறுதி.!!*
......................➖....................

🗓 பதிவுநாள்:09.09.2016

​​அட்மின் மீடியாவில் இணைய​​

☎9245581684
☎9894145692

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/profile.php?id=843847922378949

# ​மேலும் எங்கள் செய்திகளை அறிய​

http://adminmedia1.blogspot.com

Part of ⏬

📡 ​​ECHO DAWAH FOUNDATION​​📡

Give Us Your Feedback