மதினாவில் நடந்த சம்பவம் உண்மையா ?முழு விவரம்
அட்மின் மீடியா
0
மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வதந்தி செய்தி
வாட்ஸ்ஆப்பில் மீண்டும் பரவும் பழைய வதந்தி
மதினாவில் நடந்த உண்மைச் சம்பவம்:முஸ்லீம் சகோதரர்களே!படிக்கவும்!சிந்திக்கவும்!செயல்படவும்!ஷேக் முஹம்மது என சொல்லப்படும் ஒருவர் மசூதியில் வேலை செய்து கொண்டிருந்தார்.அவர் சொல்கிறார் ஓர் வெள்ளிக்கிழமை இரவு மசூதியில் குர் ஆன் ஓதிக்கொண்டு இருக்கும்பொழுது தூங்கிவிட்டேன்.அச்சமயம் ரசூல்(ஸல்) அவர்கள் கனவில் தோன்றி சொல்கிறார் இரு ஜும்மா வருவதற்குள் 60 ஆயிரம் முஸ்லீம்களே அதிகம் மரணமடைகிறார்கள் அதில் ஒருவருக்கு கூட ஈமான் இல்லை அது மட்டும் இல்லாமல் தன் உடல் அங்கங்களை அடுத்த ஆடவர்கள் பார்த்து ரசிக்கும்படி உடைகள் அணிந்து நடக்கிறார்கள் அதில் பணக்காரர்கள் தான் அதிகமாக உள்ளனர்.அந்த பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவி செய்யாமல் இருக்கிறார்கள்.ஹஜ் செய்ய வசதி இருந்தும் ஹஜ் செய்வதில்லை.மறுபடியும் ரசூல்(ஸல்) அலைஹிவஸல்லம் சொல்கிறார் ஷேக் முஹம்மது அவர்களே !உலகிலுள்ள முஸ்லிம்களுக்கு தெரியப்படுத்துங்கள் கியாமத் நாள் அதிக தூரமில்லை மிக அருகிலேயே வந்துவிட்டது.அல்லாஹ் தம்மிடம் செய்ய சொன்ன காரியங்களை செய்ய வேண்டும்.உலகத்தின் கடைசி காலம் நெருங்கிவிட்டது.அதன் அடையாளமாக வானத்தில் ஒரு நட்சத்திரத்தைக்கூட பார்க்க முடியாது.தவ்பாவுடைய கதவுகள் மூடப்படும்.குர் ஆன் ஷரிபில் எழுத்துகள் மறைந்து விடும்.சூரியன் உயரத்தில் உதயமாகும்.ரசூல்(ஸல்)அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார் இதனை மற்றவர்களுக்கு தெரியப் படுத்துவோர்க்கு கியாமத் நாளில் அல்லாஹ் சொர்க்கத்தில் இடம் கிடைக்க செய்வான். ரசூல்(ஸல்)அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஸலாவத் ஓத வேண்டும்.ரசூல்(ஸல்)அலைஹிவஸல்லம் சொல்கிறார் கியாமத் நாள் நெருங்கிவிட்டது.உலகிலுள்ள முஸ்லீம்களே தவ்பா செய்வது திங்கட்கிழமை தோறும் நோன்பு நோற்பது தர்மம் கொடுப்பது என சொர்க்கத்தில் இடம் கிடைக்க நல்ல காரியங்களை செய்யும்படி கூறுகிறார்.
இந்த விபரங்களை படித்து நல்லது செய்பவர்களுக்கு நன்மைகளும் செய்வானாக ஆமீன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நல்லது செய்வானாக அல்லாஹ்வின் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்.இதை படித்து முடித்து அழித்து விடாமல் மற்றவற்களுக்கும் Forward செய்யுங்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களே!அல்லாஹ் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது.அதேபோல் அல்லாஹ் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது.அல்லாஹ் ஒருவனே என்று ஈமான் கொள்வோம். நபி வழி நடப்போம் நல்வழி பெறுவோம்.
இதுபோன்ற ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள் இந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தராத இது போன்ற பொய்யான கட்டுக்கதைகளை நம்பி யாரும் இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்பாதீர்.
இது போல் செய்திகள் அனுப்பி மக்களை முட்டாள்களாக ஆக்காதீர்கள்
இந்த ஓரு Msg மூலம் சுவர்க்கம் கிடைத்து விடும் என்றால் அப்போ தொழுகை எதற்க்கு
ஹஜ் எதற்க்கு
ஜகாத் எதற்க்கு
இன்னும் பிற நல் அமல்கள் எதற்க்கு
இந்த செய்தியை நான் அனுப்பி விட்டால் நான் நினைக்கும் எல்லாம் நடந்துவிடுமா
அல்லாஹ்வை நம்பாமல் யாரை நம்ப போகிறீர்கள்
இது போன்ற இந்த மூடத்தனமான செய்திக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..
ஒரு செய்தியை பிறருக்கு தெரியப்படுத்துவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால் அது
லா இலாஹ இல்லல்லாஹ்'' கலிமா வை ஓங்கி உரக்க சொல்லி வாழ்வதால் மட்டுமே!..
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் தோன்றி சொல்வது மார்க்கம் ஆகாது.இதை நபிகளாரே அறிவித்து விட்டார்கள்.
மார்க்கம் முழுமை அடைந்துவிட்டது..இது போன்ற அடிப்படை ஆதாரமில்லா எந்த செய்தியையும் விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ள வேண்டாம்...
அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் கேள்வி பட்டதையெல்லாம் அதனை ஆராயாமல் பரப்புபவன் பொய்யன் என்பது நபிமொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறவர் தம் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 6197
எனவே இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்புவதற்கு முன் அதன் உண்மை தன்மை அறிந்து பகிரவும்.இல்லையேல் விட்டுவிடுங்கள். பாவத்தில் சிக்காமலிருக்கலாம்.
Tags: மறுப்பு செய்தி
