Breaking News

காஷ்மீர் சோக வரலாறு பாகம் 6

அட்மின் மீடியா
0
என்ன தான் பிரச்சனை காஷ்மீரில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய வரலாறு

காஷ்மீர் சோக வரலாறு   பாகம் 6⃣



✍காஷ்மீர் பிரச்சினை என்பது காஷ்மீர் மாநிலம் மீது இந்தியாவிற்கும், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிற்கும் இடையே நிலவி வரும் நில உரிமை தொடர்பான பிரச்சினைகளைக் குறிக்கிறது. 


✍இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை இது தீர்க்கப்படாத பிரச்சனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 


✍நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் 


✍அவ்வப்போது இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும், 

✍பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு இந்த பிறச்சனையை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்வது என்று இருந்தாலும் காஷ்மீர் சர்ச்சை இன்று வரை  தொடர்கிறது.


✍இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் பல நடைபெற்றுள்ளன. 


✍இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், வெளியுறவுத் துறை செயலாளர்கள், பிரதமர், அதிபர் போன்ற இருநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு மட்டங்களிளும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. 


✍இவ்வாறான பேச்சுகளின் முடிவில் சில முடிவுகள் எட்டப்பட்டாலும் கூட பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படவில்லை.


*இதுவரை நடைபெற்ற முக்கிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகள்*


அக்டோபர் 27, 1947 - காஷ்மீர் ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் ஒரு பகுதியானது 


ஜனவரி 1948 - இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது. 


போரின் முடிவில் லைன் ஆப் கண்ட்ரோல் எற்படுத்தப்பட்டது.


ஆகஸ்ட் 5, 1965 - காஷ்மீர் உரிமை தொடர்பான போர் மூண்டது. 


போர் முடிவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்னிலையில் லைன் ஆப் கண்ட்ரோலை எல்லையாக கொள்ள இரு நாடுகளும் சம்மதித்து போர் நிறுத்தம் அறிவித்தன.


✍ஜனவரி 10, 1966: சோவியத் யூனியன் ஏற்பாடுசெய்த அமைதி முயற்சியில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தனது. 


✍அப்போது நிலவிவந்த போர் சூழலை முடித்து வைக்க சோவியத் யூனியனின் பிரதமர் கோசிஜின், முயற்சியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது


✍ஜூலை 14-16, 2001: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மற்றும் இந்தியப் பிரதமர் வாஜ்பாயி இடையே பேச்சுவார்த்தை. ஆக்ராவில் நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவேதும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.


✍ஜூலை 2006: இந்திய-பாகிஸ்தான் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை
*இத்தனை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை அங்கு அமைதி திரும்பவில்லை*


✅காரணம் என்ன?




Tags: காஷ்மீர் வரலாறு

Give Us Your Feedback