காஷ்மீர் சோக வரலாறு பாகம் 1
அட்மின் மீடியா
0
என்னதான் பிரச்சனை காஷ்மீரில்நினைவு படுத்த வேண்டிய வரலாறு
*காஷ்மீர் சோக வரலாறு*
பாகம் 1⃣
*காஷ்மீர்ப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளக் காஷ்மீரிகளின் வரலாற்றைச் சுருக்கமாகவாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டும்*
*காஷ்மீரில் நடப்பது தேச விடுதலைப் போராட்டம்.*
இது கடந்த 150 ஆண்டுகளாக நடந்துவருகிறது.
ஜம்மு-காஷ்மீர் எனப்படும் இம்மாநிலம் மூன்று முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது. அவை
*ஜம்மு*
*காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு*
இதுவரை காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைக்கு முக்கிய மைய கரு இதுதான்
ஹரி சிங்
1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக
நடைபெற்று கொண்டு இருந்தது.
1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு
வந்தது.
இந்தியப் பிரிவினையின்
போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும்
தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ
இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக்
கொண்டன.
1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77%
இசுலாமியர் வாழ்ந்து வந்தனர்.
ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று
பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காசுமீரைத் தாக்கிக் கைப்பற்ற
முயன்றனர்.
முஸ்லிம்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்கள்
சுமார் 6 இலட்சம் அளவிற்கு முஸ்லிம்கள் ஜம்மு விலிருந்து வெளியேறினர்.
இதை எதிர்க்கும் விதமாக மன்னருக்கு எதிராக முஸ்லீம்கள் ஜம்மு பகுதியில் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இவர்களுடன்
ஆப்கானிஸ் தானின் எல்லையோர பாகிஸ்தான் பகுதியில் வசிக்கும் ‘பதான்’
ஆதிவாசிகளும், மன்னர் படைகளில் இருந்த முஸ்லிம்களும், அக்பர்கான் என்ற
பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் தலைமையில் ஜம்முவிற்குள் நுழைந்தனர்.
இந்தப் பழங்குடிப் படையினர் முஸ்லீம்கள், சீக்கியர், இந்து என வித்தியாசமில்லாமல் கொள்ளைகளில் ஈடுபட்டனர்.
இந்தப் படையெடுப்பைத் தடுக்க முடியாத மன்னர் இந்தியாவின் உதவியை நாடினார்.
காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுதியதும், காஷ்மீர் சிக்கலின் தொடக்கப் புள்ளியும் இதுதான்.
ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்துப் போராடிய காசுமீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபுவின்
உதவியை நாடினார்.
காசுமீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும்
என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும்
உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.
ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாக்கிஸ்தான்
ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர்.
இந்தியா - காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையை நிபந்தனையாக்கி, இந்திய அரசு பழங்குடிப் படையுடன் போரிட்டது.
அவர்களை விரட்டிச் சென்ற இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது.
இதை சாக்காகச் சொல்லி பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது.
இந்திய - பாகிஸ்தான் முதல் போர் முடிவுக்கு வந்தபோது இரண்டு இராணுவம் எவ்வளவு முன்னேறி உள்ளதோ அதை அவர்களே வைத்துக் கொள்ளலாம் என உடன்படிக்கை ஏற்பட்டது.
பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றியிருந்தது.
இந்த கைப்பற்றிய பகுதியின் எல்லைதான் பிறகு எல்லைக் கோடாக (LOC) நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதியை ‘சுதந்திரக் காஷ்மீர்’ என பாகிஸ்தானும்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர்’ (POK) என இந்தியாவும் அழைத்துக் கொண்டனர்.
இந்தியா பாகிஸ்தான் போரினால் காஷ்மீர் புவியியல் ரிதியாக மட்டும் பிரியவில்லை.
அங்கு வசிக்கும் ஒரே இன மக்களும் பிரிந்தனர்.
தன் சொந்த பந்தங்கள் அருகருகில் இருந்தும் கூட சந்திக்க முடியாத சூழல் இன்று வரை உள்ளது.
சோக வரலாறு தொடரும்---------
ஆதாரம்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
ஆதாரம்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
Tags: காஷ்மீர் வரலாறு


