ஏடிஎம் உஷாரா இல்லைனா பணம் காலி
அட்மின் மீடியா
0
*உஷாரா இல்லன்னா பேலன்ஸ் காலி*
❌உங்கள் போனுக்கு ஒரு அழைப்பு வரும்.
❌எதிர்முனையில் ஒரு ஆண், அல்லது பெண் பேசுவார்.
❌வணக்கம் சார்... நீங்க பயன்படுத்துற ஏடிஎம்மோட காலாவதி தேதி முடியப்போகுது.
❌இன்னும் ஒரு சில மணி நேரத்திலே காலாவதியாயிடும்.
❌அப்புறம் நீங்க ஏடிஎம் மூலமாக பணம் எடுக்க முடியாது.
❌உங்க வசதிக்காக வங்கி ஏடிஎம் ஹெல்ப்லைன் சேவை மூலமாக இதை சரி செய்றோம்.
❌உங்க ஏடிஎம் கார்டுல உள்ள 16 டிஜிட் நம்பர், பின் நம்பரை சொல்லுங்க...
நாங்க உடனே சரி பண்ணி கொடுத்துடுறோம்.
நாங்க உடனே சரி பண்ணி கொடுத்துடுறோம்.
❌இது வாடிக்கையாளர்கள் சேவைக்காக செஞ்சுட்டு வர்றோம்... உடனே சொல்லுங்க. இல்லாட்டி ஏடிஎம் மூலமாக பணம் எடுக்க முடியாது...‘ என்று கூறுவார்கள்.
❌உங்கள் ஏடிஎம்16 டிஜிட் நம்பர், மற்றும் உங்கள் பின் நம்பரை சொல்லிட்டிங்கனா அவ்வளவுதான்.
❌நீங்கள் வைத்திருக்கும் பணம் ஒரு நொடியில் காலியாகிவிடும்.
❌இதுபோன்ற மோசடிகள் தமிழகத்தில் பரவலாக நடந்து வருகின்றன.
❌ வங்கிகளில் சென்று கேட்டால் நாங்கள் யாருக்கும் போன் செய்து பேசுவதில்லை என்று கூறுவார்கள்
❌இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இப்படி வரும் அழைப்புகளை நாம் திருப்பி அழைக்க முடியாது.
❌அவர்கள் மட்டுமே பேசும்படி சிறப்பு போன் சேவையாக பயன்படுத்தி வருகின்றனர்.
*மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள*
பொதுவாக ஏடிஎம் அல்லது பிற சேவைகளுக்காக வங்கியில் இருந்து யாரும் வாடிக்கையாளர்களிடம் பேசுவதில்லை.
இதை முதலில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏடிஎம் தொடர்பாக உங்களின் விளக்கங்களை நீங்கள் வங்கிக்கு வந்துதான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
*உங்களுக்கு வரும் போன் அழைப்புகளை நம்பி, ஏடிஎம் நம்பரை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்*