Breaking News

மறைக்கப்பட்ட வரலாறு கேள்வி பதில்

அட்மின் மீடியா
0

​ECHO DAWAH FOUNDATION

சுதந்திர தின கேள்வி பதில் போட்டியில் கேட்கபட்ட

          *கேள்வி பதில்*

சுதந்திரத்திற்க்காக போராடிய 7 இஸ்லாமிய சுதந்திரபோராட்ட வீரர்கள்பெயர்களை கூறவும்?
(நாம் மறந்து விட்ட பெயர்கள்
நம்மில் பலருக்கும் நினைவு படுத்தவே இந்த கேள்வி)

💥பதில்: பகதுர் ஷா,
முகம்மது அலி,
திப்பு சுல்தான்,
சிராஜ் உத் தவ்லா,
ஹஜ்ரத் பேகம்,
குஞ்சலி மரைக்காயர்,
மருதநாயகம்.

போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த  இந்திய விடுதலைப் போரின் முன்னோடி யார்?

💥பதில்:
குஞ்சலி மரைக்காயர்.

இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரன் யார்?

💥பதில்: சிராஜ் உத் தவுலா.

தன் பஞ்சாலையில் அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக் கொடுத்த வள்ளல் யார்?

💥பதில்: உமர் சுப்ஹானி.

*ஒரு அடிமை நாட்டிற்கு இனி திரும்புவதை நான் விரும்பவில்லை*
நான் இந்த அந்நிய மண்ணில் மரணிப்பதை விரும்புகிறேன். ஏனென்றால் இது சுதந்திர மண்.  எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்!  இல்லையேல் உங்கள் மண்ணில் நான் அடக்கமாக ஒரு கல்லறை
கொடுங்கள் !
*என்று ஆங்கியேர்களிடமே முழக்கமிட்டவர் யார்*

💥பதில்: மௌலானா முஹம்மது அலி

இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் ஆங்கிலேயர்கள் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர் யார்?
அஞ்சுவதும் அடிபணிவதும்
அல்லாஹ் ஒருவனுக்கே
என்று சுதந்திர போராட்ட போர் கண்ட மாவீரன்?

💥பதில்: அமீர் ஹம்ஷா.

மகாத்மா காந்தியினை வேலைக்கு வைத்த இஸ்லாமியர் யார்?

💥பதில்: அப்துல் கரீம் ஜவேரி

இந்திய நாட்டை யுத்தபூமி என்று பத்வா வழங்கியவர் யார்?

💥பதில்: ஷாஹ் அப்துல் அஜீஸ் தெஹ்லவி.

சுதந்திரம் அடைந்தபோது டெல்லி அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்ட முதல் பாடல் என்ன?
அதனை எழுதியவர் யார்?

💥பதில்:
*பாடல்*:
ஜாரே ஜகான்சே அச்சா

💥எழுதியவர்:
*​அல்லாமா இக்பால்​*.

சிறையில் தன் குழந்தையை தொட்டு முத்தமிட்டதற்க்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அணுபவித்தவர் யார்?

💥பதில்: ஹஜ்ரத் மொஹானி.

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற இந்த

​உண்மையான வரலாற்றை​

மறைக்கப்பட்ட வரலாற்றை,

​மறக்கப்பட்ட வரலாற்றை​

மறக்கச் செய்கின்ற வரலாற்றை

​வளரும் தலைமுறைக்கு நினைவுப்படுத்திட வேண்டும்

  📡 *ECHO DAWAH FOUNDATION​*📡

Give Us Your Feedback