வரலாற்றை அறியாத நம் சமுதாயம்
அட்மின் மீடியா
0
🅰DMIN ⓂEDIA
💠பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானி் ரஹீம்
🇮🇳விழிப்புணர்வு செய்தி🇮🇳
💥💥💥💥💥💥💥💥💥💥
தன் வரலாற்றை அறியாத சமுதாயம் வரலாற்றிலிருந்தே துடைத்தெறியப்படும்" என்பதற்கு இந்திய முஸ்லிம் சமுதாயத்தைச் சரியான உதாரணமாக கூறலாம்.
💥💥💥💥💥💥💥💥💥💥
↔ கடந்த 60 ஆண்டு காலமாக தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொள்ளாமல், வெள்ளையனின் தொடையப் பிடித்து விட்டு அற்ப வாழ்வு வாழ்ந்த துரோகிகளின் சதிப்பிரச்சாரத்தில் இஸ்லாமிய சமூகமும் கட்டுண்டுத் தன்னைத் தானே தேசிய நீரோட்டத்திலிருந்து விலக்கிக் கொண்டு விட்டது.
↔கோயபல்ஸின் தத்துவத்தைச் சரியாகக் கடைபிடித்து, முஸ்லிம்கள் இந்த நாட்டிலேயே வாழத்தகுதியற்றவர்கள் என்ற ஒரு மாயையை முஸ்லிம்களின் மனதிலேயே இந்தப் படுபாவி துரோகிகள் விதைத்து விட்டனர். இதற்கானக் காரணம், தாய் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அதில் தனது சமுதாய வேங்கைகள் செய்தத் தியாகங்களையும் இந்தப் பரிதாபகரமான முஸ்லிம் சமுதாயம் சரிவர அறிந்துக் கொள்ளாமையே ஆகும். நாட்டைக் காட்டிக் கொடுத்தத் துரோகிகளின் திட்டமிட்ட வரலாற்று இருட்டடிப்பே இதற்கும் காரணம்.
↔"ஆதவனைக் கரம் கொண்டு மறைத்து விடலாம்" என்று, கிழக்கிந்திய கம்பெனிக்குக் கிஸ்தி வசூலித்து தந்து அதன் மூலம் சுகபோகம் அனுபவித்த அந்தத் துரோகிகள் நினைக்கலாம். ஆனால் எப்படி "ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லையோ" அதே போன்று, இந்திய மண்ணுக்காக இந்தச் சமுதாயம் செய்த தியாகங்களும் மறையப்போவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது; மறையவும் கூடாது.
↔அதற்காக, இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு என்றச் சத்தியத்தையும் இன்று தேசப்பற்றாளர்களாக நாட்டுக்குச் சொந்தம் கொண்டாட உரிமை கொண்டவர்களாகக் காட்டிக் கொண்டு வலம் வரும் துரோகிகளின் வரலாற்றையும் ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எவ்வளவு தான் வரலாற்றை மறைத்தாலும் மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை. நாடு பிரிக்கப்பட்டபோது "என் நாட்டை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன்" என்ற தேசப்பற்றோடு உறுதியான முடிவெடுத்த அபுல் கலாம் ஆசாத் போன்ற முஸ்லிம் தலைவர்களைத் துரோகிகளின் வஞ்சகத் திட்டங்கள் மக்கள் மனதிலிருந்து கிள்ளி எறியச் செய்ததை இனிமேலும் அனுமதிக்க இயலாது.
↔நாட்டு விடுதலைக்காகப் போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் இன்று வாய்வழியாக முஸ்லிம்களுக்குத் தெரிந்தாலும் இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பல முஸ்லிம்களின் ஈடு இணையற்றத் தியாகங்கள் மறைந்து விட்டது என்றே கூறலாம். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போன்றோர் இன்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள். அவர் ஷம்லி என்ற இடத்தில் பிரிட்டிஷார்களை ஓடச் செய்தார். அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷாவலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோரும் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்குத் தலைமை தாங்கி போராடி வீர மரணம் எய்தியவர்கள் ஆவர். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.
↔"ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா" என்ற நூலில், "விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும்" ஷா வலியுல்லாஹ் எழுதினார். இவரது மகன் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான "பத்வா"க்களை (தண்டனை பேராணை) பிரயோகித்தார். விடுதலைப் போர் துவங்கவும் "பத்வா" அறிவிக்கப்பட்டது.
↔சையத் அஹ்மத் ஷஹீத்(1831) என்ற மார்க்க அறிஞரான இவர், உ.பி., ரேபரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் எல்லைப் புறத்தில் தற்காலிக சுதந்திர அரசை துவக்கினார். அது பல ஆண்டுகள் நீடித்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் முஜாகிதீன்கள் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் பலகோட் போர்க்களத்தில் பிரிட்டிஷாரை வீரமுடன் எதிர்த்து 300 இஸ்லாமியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். "சாதிப்பூர்உலமா" இந்தப் படைக்குத் தலைமை தாங்கினார். 1845 முதல் 1871ம் ஆண்டு வரை இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார்.
↔மாவீரம் கொண்ட"மவ்லவிகள்' என்று கேட்டாலே பிரிட்டிஷார் நடுங்கினார்கள். தேசவிரோதிகள், "சிப்பாய் கலகம்" என்று மிகக் குறுகிய அளவில் சுருக்க முனையும், 1857ம் ஆண்டில் நடந்த முதல் சுதந்திரப் போரின் போது, 34 உலமா (இஸ்லாமிய மத சட்ட அறிஞர்) பிரிட்டிஷாருக்கு எதிராக பத்வா அறிவித்தார்கள். மவுலானா காசிம், மவுலானா ரஷீத் அகமது மற்றும்