பாரசிடமால் மாத்திரை எச்சரிக்கை செய்தி
அட்மின் மீடியா
0
பாரசிடமால்’ மாத்திரைகளை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற் கொண்டனர்.
கர்ப்பமாக இருந்த எலிகளுக்கு ‘பாரசிடமால்’ மருந்துகள் வழங்கப்பட்டன.
அதை தொடர்ந்து அவற்றுக்கு பிறந்த பெண் எலிகளுக்கு சிறிய கருப்பைகளும், அதில் இருந்து குறைந்த அளவிலான கரு முட்டைகளும் உற்பத்தியாகின.
அதன் மூலம் குறைந்த அளவிலேயே அவை குட்டிகளை ஈன்றன.
அதே நேரத்தில் பிறந்த ஆண் எலிகளின் விந்தணுவில் குறைந்த அளவிலான ‘செல்’கள் இருந்தன.
இதனால் சரிவர இனப்பெருக்கம் நடைபெறவில்லை.
பொதுவாக எலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான இனப் பெருக்க உறுப்புகளும், முறைகளும் ஒரே மாதிரி தான் உள்ளது.
இதனால் கர்ப்ப காலத்தின் போது பெண்கள் பாரசிடமால் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதல்ல என ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே மருத்துவரிடம் அனுமதி வாங்காமல் எந்த மாத்திரையும் போட வேண்டாம்
குறிப்பாக கற்பிணி பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல்மெடிக்கலில் எந்த மாத்திரையும் வாங்க வேண்டாம்.
செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்
9245581684
பேஸ்புக்கில் அட்மின்மீடியா செய்திகள் பெற
https://m.facebook.com/profile.php?id=843847922378949
பதிவு நாள்: 31. 01. 2016
அட்மின்மீடியா
Tags: எச்சரிக்கை செய்தி