Breaking News

சகோதரத்துவத்தின் மறு பெயர் இஸ்லாம்

அட்மின் மீடியா
0
அட்மின்மீடியா 📡
💐இறைவனின் திருபெயரால் துவக்கம் செய்கிறோம்💐
👍🏻 ஒற்றுமையே வெற்றி 👍🏻
👉அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே நாம் ஒவ்வோரு நபர்களிடமும்
இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவம் பற்றி
பேசுகிறோம்.💞
💞அல்ஹம்துலில்லாஹ்💞
👉ஆனால் நாம் இஸ்லாமியனாக இருந்தும் அந்த சகோதரத்துவம் நம் இடத்தில் இல்லை என்ற போது மனம் வேதனை படுகிறது.😩
👉இதற்க்கு காரணம் யார் 
👉அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் இன்னும் இது போல சொல்லி கொண்டே போகலாம்‼‼‼
👉அமைப்புகளாகவும்,
இயக்கங்களாகவும்,
அரசியல் கட்சிகளாகவும்,
பிரிந்து செயல் படு என்று நமக்கு கற்று தந்துள்ளதா இஸ்லாம்.....
இல்லையே!!!!

👉இருப்பினும் நாம் சகோதரத்துவத்தை கையை பிடிக்காமல், இயக்க தலைவர்களின் கையை பிடிக்கிரோம்.😞😞
👉🏼இதனால் அவர் தவறே செய்தாலும் ஆதரிக்கிறோம்.
👊🏼அவரின் சொந்த விருப்பு வெறுப்புக்காக சகோதரத்துவத்தை உடைத்தாலும் ஆதரிக்கிறோம்.
👉சிந்தியுங்கள் சகோதரர்களே👈
👉நம் இடத்தில் ஒற்றுமை இல்லாத ஒரே காரணத்தினால் தான் நாம் பல இடங்களில் தாக்க படுகிறோம், பலகீனம் அடைகிரோம்.
👉நம்மை நாம் பலப் படுத்திக்கொள்ள என்ன செய்ய போகிறோம்
இயக்கத்தை வளர்க்க வேண்டுமா??
இல்லை சகோதரர்களே
மற்ற (அமைப்பு)சகோதரன் நல்லவிஷயம் செய்யும் போது அதற்கு தோள் கொடுக்க முன்வராவிட்டாலும் அதனை எதிர்க்க முயற்சி செய்ய வேண்டாம்,குறைந்தது அவன் நோக்கத்தை சிதைக்கும் வண்ணமாக வீணாக விமர்சனமாவது செய்யாமல் இருக்க வேண்டும்.
😌பொறுமையும்,சகிப்புத்தன்மையும் அடிப்படையாக ஒரு முஸ்லீமுக்கு இருக்க வேண்டிய பண்பு
😡பொறாமையும்,காழ்புணர்ச்சியும் நம்மிடம் இருக்கக்கூடாத பண்புகள்
👉சகோதரர்களே!!👈
👆இன்ஷா அல்லாஹ்👆
👉இளைஞர்களாகிய நாம் நம்முடைய ஜமாத்தில் செய்கின்ற அனைத்து விஷயங்களையும் சரி என்று இல்லாமல் ...
👉ஜமாத் காலங்களுக்கு ஏற்றவாறு நடக்கவில்லை என்றாலோ,
👉வீண் குழப்பங்களை சமுதாயத்தின் மீது திணித்தாலோ, மற்ற முஸ்லீம்கள் மீதும் மற்ற இயக்க அமைப்புகள் மீதும் வெறுப்பு வரும்படி தூண்டினாலோ
👉ஜமாத்தை திருப்பி கேள்விகள் கேட்பது நம் மீது உள்ள கடமை ஆகும்.
👉இன்று முஸ்லீம்களின் நிலையை சிந்தித்து பாருங்கள்...
👉 💣தீவிரவாதி,
👉 🔫பயங்கரவாதி,
👉 🔥நாதியற்ற சமுதாயம்
👉என்ற பல வகையான பெயர்களை கொண்டவர்களாக இருக்கிறோம்...
👉இதற்கான பல தீர்வுகளையும் ஜமாத்துகள் குரல் கொடுக்கின்றன,
💢ஆனால் ஆளுக்கு ஒரு திசையில் போராட்டம் நடத்துகிறார்கள். ஏன்? ஏன்?
💢பிரிவதற்கு ஆயிரம் வழி இருந்தாலும் ஒன்று சேர ஒரு மையப்புள்ளி கூடவா கிடைக்கவில்லை❓❓
👉🏼இன்று முஸ்லீம்கள் பல இடங்களில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் ஆனால் அதற்காகக்கூட ஒன்றிணைந்து போராடுவதற்கு நமது அமைப்புகளும் முன் வரவில்லை நமக்கும் மனம் வரவில்லை.
💥ஜமாத்தின் தலைமைகள் இது போன்ற விஷயங்களுக்காவது குறைந்தது ஒன்றிணைந்து செயல்படலாமே ❗❗என்பது ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லீம்களுக்கும் இருக்கும் எதார்த்தமான எதிர்பார்ப்பு ஆகும்.
சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று வரும் அமைப்புகள், இங்கு இருக்கும் முஸ்லீம்களிடம் ஒற்றுமையை பிரிக்கின்றதா என்ற சந்தேகமே எழுகிறது ஒரு பக்கம்

சகோதரர்களே
👉சமுதாயத்தின் தூண்களாக இருப்போம்!!!
👉சமுதாயத்தின் தூசிகளாக இருக்க வேண்டாம்!!!
👉நபி(ஸல்)காலத்திலும் பிரிவினைகள்(கருத்து வேறுபாடுகள்)இருந்தன..
👉அவர்கள் தங்கள் பிரிவினைக்கு தீர்வாக அல்லஹூவிடமும் ரஸூலிடமும் சரணடைந்தார்கள்.
👉என்றைக்காவது மேடை அமைத்து ஒற்றுமைக்காக ஜமாத்துகள் ஒன்று கூடி இருக்கிறார்களா??
..................................

💐இதை படிக்கும் உங்களுக்கு எங்கள் மீது கோபம் வந்தால்,ஒரு நிமிடம் இதை சிந்தியுங்கள்👼🏻
👉இது ஒரு முஸ்லீம் சகோதரனின் ஏக்கம் என்று கூடவா நமக்கு தெரியவில்லை❓❓

👉மற்ற சகோதரரின் எதிர்பார்ப்பை கூடவா என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை❓❓

😷ஒரு வேளை இயக்கவெறி என் கண்ணை மறைக்கின்றதா என்பதை நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்❓

✅அல்ஹம்துலில்லாஹ் ஒரு வேளை இது அனைத்து முஸ்லீம்களுக்கு இருக்கும் எதார்த்தமான ஏக்கம்தானே என்று புரிந்து கொண்டால் தயவு செய்து சிந்தனையுடன் உங்கள் ஜமாத் தலைமையிடம் ஒற்றுமையை வலியுறுத்துஙகள் .
குறைந்தது சமுதாயத்தின் பிரச்சனை வரும்போதாவது ஒன்றிணைவோம்💪 என்பதை வலியுறுத்துங்கள்.
👉நாம் ஜமாத்தின் வெறியர்களாக இருக்கின்றோமா என்பதை நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.
👉யா அல்லாஹ் உன் சமுதாயத்திற்கு ஒற்றுமையையும் வெற்றியையும் தா அல்லாஹ்
👉தூய்மையானவன் நீ நிச்சயம் மார்க்கத்தை தூய்மையாக தான் தந்துள்ளாய்,
👉நாங்கள்தான் பலஹீனமானவர்கள் மார்க்கத்தின் புரிதலில் உள்ள பலஹீனத்தால் பிரிந்து உள்ளோம்.
👉எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக
எங்களின் பலஹீனத்தால் நாங்கள் செய்யும் தவறுக்காக எங்களை குற்றப்படுத்தி விடாதே யா அல்லாஹ்😭
👉உன் கருணையைக்கொண்டு எங்கள் பாவங்களை மன்னித்து அருள்புரிவாயாக!
👉யா அல்லாஹ்😊
💞ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்💞

🔮 செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
👉🏻வாட்ஸ்அப்பில் (ஏதேனும் இஸ்லாமிய குரூப்பின் அட்மின்கள் மட்டும்)
💥💐 9245581684 💐💥
💥💐 9894145692 💐💥
💥 பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
📡அட்மின்மீடியா📡

Give Us Your Feedback