சென்னை மூழ்கும் என்று பரவும் வத்ந்தி யாரும் நம்பாதீங்க
அட்மின் மீடியா
0
மறுப்பு செய்தி 34.
❌
வரலாறு கானாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்றோம் என்று பல புரளிகளையும், பீதி ஏற்ப்படுத்தும் செய்திகளையும் ஷேர் செய்பவர்களை அட்மின்மீடியா மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.
❌❌❌❌❌❌❌❌❌
❌ எச்சரிக்கை
''''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''''''''''''''
முடிந்தால் பகிரவும். நண்பர்களே! நீங்கள் சென்னையில் இருந்தாலோ, உங்கள் நண்பரோ, உறவினரோ இருந்தாலும் உடனே வெளியேற சொல்லுங்க, ஏன்னா அடுத்த 72மணிநேரத்திற்க்கு இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்.
❌❌❌❌❌❌❌❌❌
மேலும்
❌
❌❌❌❌❌❌❌❌
சென்னைல பெய்யரது வெறும் மழை அல்ல, NASA ரிப்போர்ட் படி இதுதோட பெயர் EL Nino சூழ்ர்ச்சி புயல் , கீட்ட தட்ட 250 Cm வரைக்கும் இந்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு, சென்னை யே முழுகி போக வாய்ப்பு உண்டு, google ல Search பண்ணி பாருங்க தெரியும், எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு தெரியபடுத்துங்க PLZ,,,, அரசாங்கம் இத பொருட்டா எடுத்துக்கல...வண்டலூர் பூங்காவில் இருந்து 40 முதலைகள் தப்பியது
அனைவரும் ஜாக்கிரதை
Alert for Chennai People 👇👇#IMPORTANT.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே கடல் பரப்பில் காற்று அழுத்தம் உருவாகி இருக்கிறது. இது நாளை இரண்டாக பிரியும். ஒன்று இலங்கை நோக்கி நகரும். மற்றது தமிழகத்தை நோக்கி வரும். தமிழகம் நோக்கி வட மேற்காக நகரும் காற்று அழுத்த மண்டலமும், இலங்கை நோக்கி தென் மேற்காக செல்லும் கா. அ. மண்டலமும் அரை வட்டமிட்டு மீண்டும் ஒன்றாக சேரும். அப்போது அது அநேகமாக சென்னை அருகில் கடலில் நிலை கொள்ளும். சுற்றுப் பயணம் செய்ததால் இரு மண்டலங்களின் அழுத்தமும் அதிகமாகி இருக்கும். அப்படி வலுவான ஒருங்கிணைந்த மண்டலம் சென்னை அருகே நிலை கொள்ளும்போது சென்னையிலும் வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் காற்றும் மழையும் பலமாக இருக்கும்.
பின்னர் இது மீண்டும் இரண்டாக பிரிந்து, ஒன்று வடக்கு வட கிழக்கு திசையில் ஆந்திரா ஒடிசா கடலோரத்தை தேடி பயணம் தொடங்கும். ஆனால் இரண்டாவது பிரிவு, அதாவது எஞ்சியுள்ள அழுத்த மண்டலம் எங்கேயும் நகராமல் சென்னையை நோக்கியபடி அப்படியே உட்கார்ந்திருக்கும்.
அந்த அழுத்த மண்டலம் எத்தனை நாள் சென்னை அருகே முகாமிடும் என்பதை உறுதியாக சொல்ல இயலாது. ஆனால், கடந்த வாரம் நடந்ததைவிட கூடுதல் நாட்கள் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரியும்.இன்னும் எளிமையாக சொல்வது என்றால், அடுத்த வாரம் சென்னை நகரை மறுபடியும் அடித்து துவைத்து புரட்டி எடுக்கப் போகிறது மழை. அது, ஏற்கனவே பெய்த மழை ஜுஜுபி என்று சொல்லும் அளவுக்கு இருக்கலாம். இது நமது உள்ளூர் மழை ரமணன் தெரிவித்த தகவல் அல்ல. அமெரிக்காவின் க்ளைமேட் ப்ரெடிக்ஷன் சென்டரும் ஐரோப்பாவின் சென்டர் ஃபார் மீடியம் ரேஞ்ச் வெதர் ஃபோர்காஸ்டும் விடுத்த அறிக்கைகள் தரும் எச்சரிக்கை. எப்போதுதான் ஓயும் என்கிறீர்களா?
டிசம்பர் 6 ஆம் தேதிக்கு பிறகு. இதை வாசிப்பவர்கள் நல்லெண்ண லிஸ்டில் உள்ளவர்களுக்கு பகிரலாம். முன் எச்சரிக்கை நல்லதுதானே?.
❌❌❌❌❌❌❌❌❌
❌
மேலே உள்ள செய்திகள் பரவலாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
❌
இது முழுக்கமுழுக்க பொய்யான செய்தி
மக்கள் பீதியடைய வேண்டாம்.
❌
சரி அப்படி உண்மை என்றாலும்.
❌
மத்திய அரசு எந்தவித எச்சரிக்கையும் கொடுக்கவில்லை
❌
தமிழக அரசு எந்தவித எச்சரிக்கையும் கொடுக்கவில்லை
❌
சென்னை வானிலை மையம் இது பற்றிய செய்திகள் சொன்னதாக இல்லை.
❌
மேலே உள்ள செய்தி தொலைக்காட்சிகளிலோ அல்லது வேறு ஏதாவது மீடியாக்கள் கூறினார்களா
➖இல்லை
➖இல்லை
➖இல்லை
❌
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கூகுலில் உங்களை தேட சொன்னார்களே அதை தேடி பார்த்தீர்களா அது இதுதான்
❌
அதற்க்கும் மழைக்கும் சம்மந்தம் இல்லை
❌
பிறகு ஏன் இது போல் பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள்
❌
அதனால் உங்களுக்கு என்ன லாபம்
❌
இதற்க்கு பெயர் என்ன தெரியுமா
❌
அடுத்தவர்கள் துன்பத்தில் நீங்கள் இன்பம் காண்பது சரியா
❌
பாதிப்புக்கு உள்ளான மக்கள் மனநிலை பற்றி தெரியுமா உங்களுக்கு
வீடிழந்து,உடமைகளை இழந்து அடுத்த வேலை உணவிற்காக அடுத்தவத்களிடம் கையேந்து பவர்களின் வலி தெரியுமா உங்களுக்கு.ஏன் இப்படி கோவப்படுடீறீங்க இந்த செய்தி உண்மையா இருக்குமோ என்று எனக்கு வந்த செய்தியினை நான் ஷேர் செய்தேன் நான் என்ன செய்வேன் என்று கூறுபவர்களே உங்களுக்கு தான்
செய்தியின் பின்னணி தன்மை தெரியாமால், அதன் பாதிப்பு தெரியாமால் பொய்யான செய்தியினை நாம் ஷேர் செய்தி பொய்யர்கள் என்ற பெயர் பெற்று அடுத்தவர்கள் அந்த பொய்யான செய்தியினை ஷேர் செய்து அவர்கள் பொய்யர்கள் என்று பெயர் வாங்கி கொடுக்கிறோம். நான் என்ன செய்வது எனக்கு ஒரு குருப்பில் வந்தது நான் அதை ஷேர் செய்தேன் அது தவறா என்று சொல்பவர்களே சற்று சிந்தியுங்கள்
📡
அட்மின்மீடியா
📡
பதிவு நாள்: 4 .12 .15
Tags: மறுப்பு செய்தி