Breaking News

மத்திய அரசின் டிஜிட்டல் நூலகம் உங்களுக்கு தேவையான புத்தகங்களை டவுன்லோடு செய்ய

அட்மின் மீடியா
0
மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. 




இதில் ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். 

இந்த நூலகம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த நூலகம் செயல்படுகிறது. 

பள்ளிக் கல்வி, சிபிஎஸ்இ தேர்வுகள் தயாரிப்பு, பொறியியல், அறிவியல், மானுடவியல், இலக்கியம், சட்டம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 

இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை என்சிஇஆர்டி மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட 20 பள்ளிக் கல்வி வாரியங்களின் பாடத்தொகுப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 


இந்த மின்னணு நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் https://ndl.iitkgp.ac.in/ என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து, தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். 

இதன்பின் இவர்கள் டிஜிட்டல் உறுப்பினர்களாகக் கருதப்படுவர். அவர்களுக்குத் தனிப் பயன்பாட்டுப் பெயர், கடவுச்சொல் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை மின்னணுப் புத்தகங்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

நூலகம் செல்ல 

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback